பக்தி இலக்கியங்களின் தோற்றம் பக்தி இலக்கிய காலத்தில் இயற்றமிழ்ப் பாடல்க ள் பண்ணோடு இயைந்து இசைத் தமிழ்ப்பாடல்களாக மாறின. கற்றோர் நாவில் மட்டும் நடனமாடிய தமிழ், கல்லாதார் நெஞ்சிலும் களிநடனம் புரிந்தது. வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபு தEோன்றியது. சொல் வளமும் உணர்ச்சிப் பெருக்கும், இசை இனிமையும் சேர்ந்து தமிழ் இலக்கியம் புது மெருகு பெற்றது.
இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன. சங்க இலக்கியத்தில் மாந்தரின் காதல் வாழ்வு கற்பனை கலந்த பாடல்க ளாகப் பாடப்பட்ட து.
பின்னர் இந்நிலை மாறி, தெய்வத்தின்மீது கொண்ட காதலைப் பாடும் பாடல்களாக வளர்ச்சிபெற்றன. அரசர்களின் வீரம் மற்றும் கொடைகளைப் பாடிய பாடல்கள், கடவுளின் திருவிளையாடல்களை யும் அருட்செயல்களையும் பாடும் பாடல்களாக மாறின. கற்பனைக் காதலுக்குப் பின்னணியாக இயற்கைச் சூழல் வருணிக்கப்பட்டது போலவே கடவுளிடம் செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் கோவில் தலங்களைச் சூழ்ந்த ஊர்களின் இயற்கையழகைப் பாடும் நிலை உருவானது.