பாவேந்தர் பிள்ளைத்தமிழ் வடிவமை காதினில் குண்டலகேசி வயங்கொளி கொண்டாட வார்ந்த எழிற்கரம் ஏந்திய ஆடக வளையாபதி ஆடத் துடியிடை கையினில் ஒரு பிடி என்று துவண்டு துவண்டாடும் துறவற மேகலை ஒரு புறமாகவும் தூய சிலம்பாடும் அடிமலர் கண்டொரு மாமயி லானவன் ஆடுக செங்கீரை அஞ்சுகமாம் தமிழ் கொஞ்ச மகிழ்ந்தவன் ஆடுக செங்கீரை பாடலின் விளக்கம்: தமிழ் மொழியைப் பெண்ணாகவும், அம் மொழியில் அமைந்த நூல்களின் பெயர்களைப் பெயர்ஒப்புமைகொண்டு அப்பெண்ணின் அணிகலன்களாகவும் உருவகப்படுத்தி, தமிழ்ப்பெண் ஆடிய அழகைக் கண்டு மனத்தைப் பறிகொடுத்து மயில் போலக் களித்து, பாக்களைப் பாடிய புரட்சிக்கவிஞராம் குழந்தையே! நீ, செங்கீரையாடி அருள்வாயாக.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 45poem
பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
Chapter 63: பாவேந்தர் பிள்ளைத்தமிழ் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →