📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 36poem

பெரியபுராணம்

Chapter 45: பெரியபுராணம் · ADVANCED TAMIL

பெரியபுராணம் பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை‘, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி‘ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. இது அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக சருக்கங்களையும் உடையது. இது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார். இவரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர். ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தEொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர். அடியவர்களின் பெருமையைக் கூற கருதிய சேக்கிழார், பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார் இவரைநீ அடைவாய் என்று என்ற பாடல்வ ழியே இறைவனின் மெய்யன்பினைப் பெற்றவர்கள் இம்மை மறுமைகளைக் கடந்து இனிய நிலையைப் பெறுவார்கள் எனக் கூறுகிறார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →