திருக்காவலூர்க் கலம்பகம் சீர்த்ததிருக் காவல்நல்லூர்த் தேவஅணங்கு தாள்கமலம் நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனகாண் அம்மானை நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனஎன்று ஆம்ஆகில் ஆர்த்ததிரு வண்டுஉவப்ப ஆங்குஅலரா அம்மானை போர்த்ததிருச் சோதிஇன்புஅப் போதுஅலரும் அம்மானை பாடல் விளக்கம் : முதல் பெண் கூறுவது: பெருமைமிக்க செல்வமுடைய திருக்காவலூரின் தெய்வப்பெண் அடைக்கல அன்னை. அவள் திருவடிகளாகிய தாமரை மலர்கள் குளிர்ந்த நிலவின்மீது பொருந்தி உள்ள அதிசயத்தைப்பார். இரண்டாம் பெண் வினாவுதல்: ” நிலவில் அன்னையின் தாமரை போன்ற திருவடி பொருந்தி உள்ளது” என நீ கூறுகின்றாய். அது உண்மை. ஆனால் நிலவு உள்ள இடத்தில் தாமரை மலர்கள் மலருமா? மூன்றாம் பெண் முடித்தல்: அன்னையின் அருளாகிய,”கதிரவன் நிகர்த்த சோதியின் இன்பத்தில் தாமரைகள் மலர்வது இயல்புதானே” என்று முடிக்கின்றாள்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 43poem
திருக்காவலூர்க் கலம்பகம்
Chapter 58: திருக்காவலூர்க் கலம்பகம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →