காப்பியச்சுருக்கம்
Chapter 34: கம்பராமாயணம் · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about காப்பியச்சுருக்கம்?
காப்பியச்சுருக்கம் அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் பால காண்டத்தில் கூறப்படுகிறது. கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடை வது அயோத்தியா காண்டத்திலும், இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது ஆரணிய காண்டத்திலும், சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்திலும், இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன சுந்தர காண்டத்திலும் இராவணனை அழித்து சீதையை மீட்பது யுத்த காண்டத்திலும் விளக்கப்படுகின்றன.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 35
Read from the source
Complete lesson
காப்பியச்சுருக்கம் அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் பால காண்டத்தில் கூறப்படுகிறது. கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடை வது அயோத்தியா காண்டத்திலும், இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது ஆரணிய காண்டத்திலும், சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்திலும், இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன சுந்தர காண்டத்திலும் இராவணனை அழித்து சீதையை மீட்பது யுத்த காண்டத்திலும் விளக்கப்படுகின்றன. இறைவனின் தன்மையினைக் கம்பர் கூற வந்த விடத்து, சாணினும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற தூணினும் உளன் நீசொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை காணுதி விரைவின் என்றான் நன்றெனக் கனகன் சொன்னான் என்னும் பாடல் வழியாக, இறைவன் உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதாகக் கூறுகின்றார்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →