கம்பராமாயணம்
Chapter 34: கம்பராமாயணம் · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
கம்பராமாயணம் தமிழில் தEொடர்ச்சியாகச் செல்வாக்கு பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணம். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய நடையில் கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம். இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது. இதன் காலம் கி.பி. -ஆம் நூற்றாண்டு. கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது. கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும், படலங்களையும் உள்ளடக்கியது. இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பரின் சமகாலத்தவராகிய ஒட்டக்கூத்தர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் " தமிழுக்குக் கதி" ( கம்பராமாயணம், திருக்குறள்) என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →