காதல் பண்டைத் தமிழ்மக்களின் அன்புள்ளத்தோடு கலந்த ஓர் அகவுறுப்பாகவே புறவியற்கை விளங்கிற்று. அவ்வியற்கை, பழந்தமிழ் மக்களின் எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அகத்திணைப் பாடல்க ளில் காணலாம். ஒவ்வோர் அகத்துறையும் இயற்கையோடு உறவுடையது. நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார் விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே - குறுந்தொகை ஆசிரியர் : வெள்ளிவீதியார் திணை : பாலை கூற்று : தோழி கூற்று பாடல் பொருள்: நிலத்தைத் தEோண்டி அதனுள் புகமாட்டார்; வானத்தில் ஏறமாட்டார்; குறுக்கிடும் பெரிய கடலில் காலால் நடந்து செல்லார்; நாடுகள்தோறும், ஊர்கள்தோறும் குடிமுறைகள்தோறும் தேடிப்பார்த்தால் காணாமற்போவாரோ நம் காதலர். ஆகையால் வருந்தாதே எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 16poem
காதல்
Chapter 16: 8 · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →