generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 18grammar_exercise

கொடை

Chapter 10: கொடை · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கொடை?

கொடை சங்ககாலத்தில், பொருள் உடையவர்கள் அதன் தேவைகருதி வேண்டி வருவோருக்குப் பயன் கருதாது வாரி வழங்கும் கொடைத்தன மையுடையோராய் விளங்கினர். இரப் போர்க்கு வரையாது கொடுப்பதே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்தனர். சங்கக்கவிதைகள் வழி இக்கொடைப்பாங்கு சிறந்து விளங்கிய பான்மையை நாம் அறியலாம். பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறவந்த முடத்தாமக்கண்ணியார் பின்வரும் பாடல்வ ழிப் புலப்படுத்துகிறார்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 18

Read from the source

Complete lesson

கொடை சங்ககாலத்தில், பொருள் உடையவர்கள் அதன் தேவைகருதி வேண்டி வருவோருக்குப் பயன் கருதாது வாரி வழங்கும் கொடைத்தன மையுடையோராய் விளங்கினர். இரப் போர்க்கு வரையாது கொடுப்பதே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்தனர். சங்கக்கவிதைகள் வழி இக்கொடைப்பாங்கு சிறந்து விளங்கிய பான்மையை நாம் அறியலாம். பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறவந்த முடத்தாமக்கண்ணியார் பின்வரும் பாடல்வ ழிப் புலப்படுத்துகிறார்.

ஈற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும் கையது கேளா அளவை ஒய்யெனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கித் தூய கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் பெறல ருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப் பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல் வைகல் கைகவி பருகி எரியகைந் தன்ன வேடில் தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி. நூலின் வலவா நுணங்கரில் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணியக் கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் ஊட்டுளை துயல்வர வோரி நுடங்க பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் காலி னேழடிப் பின்சென்று கோலின் தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த் தண்பணை தழீஇய தளரா விருக்கை நன்பல் லூர நாட்டொடு நன்பல். வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை வெருவரு செலவின் வெகுளி வேழம் தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப் பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச் செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவ னல்லன் - பொருநராற்றுப்படை பாடல்பொருள்: பொருநர்களே! கரிகால் பெருவளத்தானை நீங்கள் நாடிச்சென்றால் பசு தன் கன்றை அன்போடு அரவணைத்தல் போல, உங்களை விரும்பிப் போற்றுவான்.

நீங்கள் கைதEொழுவதற்கு முன்பாகவே பட்டாலான புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். நீங்கள் புத்தாடை புனைந்தபின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். பின்னர் விருதாக உங்கள் தலையில் பொன்னாலான தாமரையைச் சூட்டுவான். அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.

வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் என்பான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான்.

கரிகாலன், குதிரையை ஓட்டும் தேரோட்டியின் கையில் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் தாற்றுக்கோல் இல்லாமல் செய்வான். இது அவன் விலங்குகள்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →