நம்மை அளப்போம்
Chapter 5: Class 12 Tamil · Part 3 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about நம்மை அளப்போம்?
நம்மை அளப்போம் சிறுவினா . ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக. . நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்? . மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. . கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக. நெடுவினா . அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக. . பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக. . ‘ ரியனைப் பிரசவிக்கும் பாறை’ எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 104
Read from the source
Complete lesson
நம்மை அளப்போம் சிறுவினா . ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக. . நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. . கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
நெடுவினா . அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக. . பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
. ‘ ரியனைப் பிரசவிக்கும் பாறை’ எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக. மொழியை ஆள்வோம் சான்றோ ர் சித்திரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.
அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கே ட்டபோது, ‘அஃது’ என்பது ஆய்த் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
பரிதிமாற்கலைஞருடனான நட்பு, ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். ‘சுவாமி வே தாசலம்’ என்னும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூயதமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் ( ), Oriental Mystic Myna ( ), Ocean Of Wisdom ( ) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்ததார்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும். மறைமலையடிகள் ( - ) தமிழாக்கம் தருக. The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs.
In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all.
The rural papulation is completely neglected; There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries. The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits.
கீழ்க்ககாணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக. இன்றைய வாழ்க்ககைச் ழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவை களுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்ககையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நம் முன் னோர்கள்.
ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்தே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வே ண்டியது அவசியமாகும். உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும். தேவை யான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சே ர்த்து, அதிக காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. . வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன. .
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான். . கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். .
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்க் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன். . ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன. .
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர். தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது. . எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது. .
ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். . மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. .
ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்து. . இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். பின்வரும் பழமொழிகளை வாழ்க்ககை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
. ஆனைக்கும் அடிசறுக்கும். . தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. . எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
. ஊழி பெயரினும் தாம் பெயரார். . வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
. கூடி வாழ்ந்ததால் கோடி நன்மை. . அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
மொழியோடு விளையாடு எண்ணங்களை எழுத்தாக்குக. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க. எ.கா. பலகை பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.
பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின. . தாமரை . கோவில் .
வெங்காயம் . தலைமை செய்து கற்போம் அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அறிந்து அட்டவணைப்படுத்துக. நிற்க அதற்குத் தக நீவிர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரண ங்கள் என்ன?
பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்? விபத்திற்கான காரணங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதம் உதவலாம்? அனுமதித்த அளவை விட வே கமாக ஓட்டுதல்.
முதலுதவி செய்தபின் வே கமாக ஓட்டக்கூடாது என்று அறிவுரை கூறுவே ன். கவிபாடலாம் - கி.வா. ஜகந்நாதன் படைப்புக்கலை - மு. சுதந்திரமுத்து கவிஞராக - அ.கி.
பரந்தாமனார் வெயிலும் நிழலும் - பிரமிள் மெய்ப்பபாடு - தமிழண்ணல் வே ர்களின் பேச்சு - தோப்பில் முகம்மது மீரான் அறிவை விரிவு செய் படிப்போம்; பயன்படுத்துவோம்! Discussion - கலந்துரையாடல் Higher Education - உயர்கல்வி Value Education - மதிப்புக்கல்வி Road safety - சாலைப் பாதுகாப்பு Traffic signal - போக்குவரத்துச் சமிக்ஞை Vice Chancellor - துணைவே ந்தர் . அறிவு உடைமை . அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும். . சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. * எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். (சொற்பொருள் பின்வரும் நிலையணி)
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →