Class Tamil · Part
Chapter 5: Class 12 Tamil · Part 3 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about Class Tamil · Part?
எனது கிராமத்தின் கிழக்குத் திசையில் இருக்கும் பாறைதான் ரியனைப் பிரசவிக்கிறது. காலையில் எழுந்து பார்க்கும்போது அந்தப் பாறையின் விலாவைப் பிளந்துகொண்டு ரியன் வெளிவருவது தெரியும். பாறையின் வயிற்றிலிருந்து தினமும் ஒவ்வொரு ரியன் வெளிவருகிறது. வானத்தரையில் தவழ்ந்து கொண்டே நகர்ந்து கடலில் கால் இடறி விழுந்து இறந்துபோகிறது. ரியன் இறக்கும் போது இருட்டு மே யத் தொடங்குகிறது. அவ்வாறு தினமும் ஒரு ரியனைப் பிரசவிக்கும் பாறை எனக்கு மாபெரும் அற்புதம்! எத்தனை எத்தனை ரியன்தான் இந்தப் பாறையின் வயிற்றுக்குள் மறைந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கே ட்டார்: ” ரியன் எங்கே உதயமாகிறது?” குழந்தைகளெல்லாம் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். ”மீரான்! பதில் சொல்லு.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 96
Read from the source
Complete lesson
எனது கிராமத்தின் கிழக்குத் திசையில் இருக்கும் பாறைதான் ரியனைப் பிரசவிக்கிறது. காலையில் எழுந்து பார்க்கும்போது அந்தப் பாறையின் விலாவைப் பிளந்துகொண்டு ரியன் வெளிவருவது தெரியும். பாறையின் வயிற்றிலிருந்து தினமும் ஒவ்வொரு ரியன் வெளிவருகிறது. வானத்தரையில் தவழ்ந்து கொண்டே நகர்ந்து கடலில் கால் இடறி விழுந்து இறந்துபோகிறது.
ரியன் இறக்கும் போது இருட்டு மே யத் தொடங்குகிறது. அவ்வாறு தினமும் ஒரு ரியனைப் பிரசவிக்கும் பாறை எனக்கு மாபெரும் அற்புதம்! எத்தனை எத்தனை ரியன்தான் இந்தப் பாறையின் வயிற்றுக்குள் மறைந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கே ட்டார்: ” ரியன் எங்கே உதயமாகிறது?” குழந்தைகளெல்லாம் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.
”மீரான்! பதில் சொல்லு.” நான் கையை நிக்கரில் (அரைக்கால் சட்டை) தே ய்த்துக்கொண்டு எழுந்தேன். கிழக்குத் திசையில் கையைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன், ”பாறையின் உள்ளேயிருந்து.” ”பேஷ்! மீரான் உக்காரு.” ரியனைப் பெறும் பாறையை நேரில் சென்று பார்ப்பதற்கு அன்று முதல் ஆர்வம் அலைமோதியது.
ஆற்றைக் கடந்துதான் அங்குப் போக முடியும். உம்மாவோ(அம்மா) வாப்பாவோ(அப்பா), தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்கள். ஆற்றைக் கடக்க அச்சம். வாப்பாவுக்கு அச்சம்.
காலையில் உம்மா பழைய சோற்றை வாரித் தரும் போது என்ன கே ட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. 'உம்மா எனக்கு அந்தப் பாறையை க் காட்டித்தா.' 'அந்தப் பாறையில் ஏறக்கூடாதுடா. அங்கே ஊசிக் கிணறு இருக்கு. ஊசிக் கிணறுக்கு ஒரு பெரிய பாம்பு காவல் நிக்கிது.
பாம்பு கொத்தும்.' 'பாம்பு ரியனைக் கொத்தாதோ?' உம்மா பதில் சொல்லவில்லை. 'கொழும்பிலே ருந்து வந்த தங்கள் (சமய அறிஞர்) அந்தப் பாறைக்குப் போனப் போ தண்ணித் தாகம் எடுத்து. ஒடனே கையிலிருந்த கம்பை எடுத்துப் பாறையில் இடிச்சாரு. பாறை பொத்துப் போச்சு.
தண்ணி பொங்கி வந்து. தங்கள் தண்ணி குடிச்சுத் தாகம் தீர்த்துக் கொண்டாரு. பெறவு ஒரு கல்லை எடுத்து அதை மூடுனாரு. யாரும் அந்த மூடியை எடுக்காம ஒரு பாம்பைக் காவலுக்கு நிறுத்தினாரு.
அந்த மூடியை எடுத்தா தண்ணி மேலே வந்து இந்த் துன்யாவே (உலகம்) அழிஞ்சிடும்.' என் கண்களில் பயம் நிழலாடியது. என்றாலும் அந்தப் பாறையில் ஒரு தடவையாவது ஏறிப்பார்க்க வே ண்டும். எனது தீராத ஆசை. ”உம்மா அதுக்க (அதனுடைய) மூடியை நம்ம எடுக்காண்டாம்.
ஒருக்கா ஏறிப் பாத்துட்டு வந்துட்டா என்ன?” - தோப்பில் முகமது மீரான் ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தைப் பருவம் பெருவெகுமதியாகும். அப்பருவத்தில் நம்பக்கூடிய, நம்ப இயலாத செய்திகள் காதில் விழும். பகுத்தறிவால் அச்செய்திகளை உரசிப் பார்த்ததால் உண்மை வெளிப்படும்; தடுமாற்றம் கொள்ளும் எண்ணங்களுக்குத் தெளிவான தீர்வு கிடைக்கும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →