📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 135grammar_exercise

திரு. வி. கலியாணசுந்தரனார்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

திரு. வி. கலியாணசுந்தரனார் "திரு.வி. கலியாண சுந்தரனாரின் உரை மேடை யில் மெல்லிய பூங்காற்றாக வீசியது.

அவர் உரையில் அதிர்வோ ஆர்ப்பாட்டமோ இ ரு க் க து . எளிமையான கருத்துப் பொழிவில் எழில் சேர்ப்பார். கருத்துகளைத் தெள்ளிய நீரோடைபோலக் கேட்போர் இதயங்களில் பாயச் செய்வார்.” திரு.வி.க. தமிழ் மாணாக்கர் மாநாட்டில் .

. இல் ஆற்றிய தலைமையுரையில் தமது பேச்சை முடிக்குமிடத்தில் “சகோதரிகளே! சகோதரர்களே! இன்னும் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை இடுவதற்கு என் மனம் எழவில்லை.

இதுகாறும் பொறுமையுடன் என் புன்மொழிகளைச் செவிமெடுத்த உங்களுக்கு எனது நன்றியறிதலான வணக்கம் உரியதாகுக. வருங்கால உலகம் உங்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதற்கு முதலாவது உடலை ஓம்பிக் கல்வி பயின்று, விஞ்ஞானக் கலைகளில் ஊக்கம் செலுத்துங்கள்; நாட்டுக் காவியங்களுடன் உறவுகொண்டு, அவற்றின் இயற்கை அமிழ்தை உண்ணுங்கள்; உங்களை நன்முறையில் பயன்படுத்த தமிழ்த்தாய் உங்கள் முகத்தை நோக்கிய வண்ணமாய் இருக்கிறாள். அவளைப் பற்றியுள்ள பீடிகைகள் எல்லாவற்றையும் தொலைக்க எழுங்கள்!

எழுங்கள்! இளம்பரிதிகளே! சாதிவேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை முதலிய கட்டுகள் இரிந்து ஓட தமிழ்க்கதிர் பரப்பி எழுங்கள்! எழுங்கள்!“ என எழுச்சியுடன் நிறைவு செய்துள்ளார்.

இவர், பேச்சின் தொடக்கமாக இருந்தாலும் முடிவாக இருந்தாலும் தம் கருத்தை மக்க ளிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் வெற்றியடைந்துள்ளார். இவரைத் ’தமிழ்த்தென்றல்’ எனவும் அழைப்பர்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →