📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 218grammar_exercise

தொழில்நுட்பம், வணிக உத்தி

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தொழில்நுட்பம், வணிக உத்தி பரிமாற்றம் செய்து, (Facsimile Transmission S y s t e m ) பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை முதலில் தொடங்கியவர் இவரே. ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்ட இம்முறையினால் செய்தித்தாள் விநியோகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்தினார். இம்முறையிலான முதல் வெளியூர்ப் பதிப்பு 1969இல் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது. 1980இல் உலோக எழுத்துருக்களைக் கோத்து அச்சிடும் முறையிலிருந்து தட்டச்சு செய்து பக்கங்களைத் தயார் செய்யும் முறைக்கு மாறியபோதும் பின்னர், ஒளியச்சுக் கோவைக்கு மாறியபோதும் அவர் ஏற்கெனவே பணிபுரிந்து கொண்டிருக்கும் எந்தவொரு ஊழியரையும் மா ற்றவில்லை.

மாறா க அவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தில் போதுமான அளவில் பயிற்சியளித்துத் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பளித்தார். 1990இலிருந்து மின்னணுப்பக்கங்களாகப் பரிமா ற்றம் செய்யப்படுகிறது தி ஹிந்து நாளிதழ். வண்ண அச்சுமுறை நடைமுறைக்கு வந்தபோது வண்ணப்படங்களுக்காகவே தி ஹிந்து நாளிதழும் அதன் குழும இதழ்களும் புகழ்பெற்றன. நேர்த்தியான புகைப்படக் கலைஞன் ஒருவனின் கைவண்ணத்தில் உருவாகும் ஒரு வண்ணப்படம் அதே தரத்துடன் நாளிதழில் வெளியாகும்போதும் அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

கஸ்தூரி, தமது தொலைநோக்குமிக்க வாணிக மேலாண்மையாலும், காலத்திற்கேற்ற நவீனத் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தியதிலும் தேசிய அளவில் நாளிதழ் ஆசிரியர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார். 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →