தொலைந்து போனவர்கள் XI Std Tamil தமிழ்க் கவிதைகளுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர்களின் பட்டியலைத் திரட்டி, நூலின் பெயர், ஆண்டு ஆகியவற்றோடு அட்டவணை உருவாக்குக. நூல்வெளி அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்.
பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான பல நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது , ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இப்பாடல் ‘சுட்டுவிரல்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இலக்கணக் குறிப்பு கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று; உடை அணிந்தேன் – இரண்டாம் வேற்றுமைத்தொகை; உரைத்தாய் – முன்னிலை .ஒருமை வினைமுற்று கற்பவை கற்றபின்...
ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்பிடத்தக்கது. அப்துல் ரகுமான் இது பற்றி எழுதியிருக்கிறார். புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்திருக்கிறார் ரூமி.
என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்திப் பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும் அழுது புலம்புகின்றனர். இதை, "தீய குணங்கள் என்ற கறைகள் படியாத தூய உலகம் அது. அப்போது ஆன்மா இறைத்தரிசனம் என்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. இத்தகைய நிலையிலிருந்த ஆன்மாவைப் போர், பொறாமை, பூசல், அகந்தை, கள்ளம், கபடம், பேராசை, சினம், காமம் நிறைந்த சடவுலகுக்கு அனுப்பினால் அது அழாமல் என்ன செய்யும்?" என ரகுமான் விளக்குகிறார்.
பகுபத உறுப்பிலக்கணம் வென்றேன் – வெல்(ன்) + ற்+ஏன் வெல் – பகுதி (ல், ன் எனத் திரிந்தது விகாரம்) ற் – இறந்தகால இடைநிலை ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி நிற்கின்றாய் – நில்(ற்)+ கின்று+ ஆய் நில் – பகுதி (ல், ற் எனத் திரிந்தது விகாரம்) கின்று – நிகழ்கால இடைநிலை ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி பெற்றேன் – பெறு(பெற்று) + ஏன் பெறு – பகுதி (பெற்று என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது) ஏன்- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி அணிந்தேன் – அணி+த்(ந்)+த்+ஏன் அணி – பகுதி த் – சந்தி (த், ‘ந்‘ எனத் திரிந்தது விகாரம்) த் – இறந்தகால இடைநிலை ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி XI Std Tamil சுந்தர முனிவர் தனது அறையிலிருந்து ஆசிரமம் வரை யாரும் அறியாவண்ணம் சுரங்கம் அமைக்கும் பணியை நடராசனுக்கு அளித்திருந்தார். நடராசனும் அப்பணியை ஓரளவு முடித்துவிட்டான். ‘இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதுவும் இன்றிரவு முடிந்துவிடும்’ என்று எண்ணிக்கொண்டு காலை வேளையில் ஊரின் புறமாக நடராசன் தனித்திருந்தான்.
அப்போது தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும். நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த மனோன்மணீயம் என்னும் இந்நாடக நூல், காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது.
இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ளது இந்நூல்.