அருணகிரி அந்தாதி
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அருணகிரி அந்தாதி?
செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி அப்பனே நன்னூல் அறிந்தாலும் – இப்புவியில் கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் பயனேது? கண்டவெல்லாம் வீணிலே கற்று. கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ? நல்லகுலம் பெற்றதனால் போமோ பிறவிநோய் - உற்றகடல் நஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை நெஞ்சுகந்து கொள்ளா நெறி. (மேற்கண்ட இரு பாடல்க ளில், முதல் பாடலின் இறுதிச் (அந்தம்) சீராகிய கற்று என்பது, அடுத்த பாடலின் முதல் (ஆதி) சீராக அமைந்து அந்தாதித் தEொடையாக வந்துள்ளது) பாடல் விளக்கம்: உலகில் நல்ல பல நூல்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தாலும், தனக்குக் கிடைத்த குருநாதரை மதியாதவருக்கு யாதEொரு பயனுமில்லை. ஈட்டிய செல்வங்களும், துய்த்த இன்பங்களும் எவ்விதப் பயனுமின்றி வீணே கெட்டழியும்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 42
Read from the source
Complete lesson
செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி அப்பனே நன்னூல் அறிந்தாலும் – இப்புவியில் கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் பயனேது? கண்டவெல்லாம் வீணிலே கற்று. கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ? நல்லகுலம் பெற்றதனால் போமோ பிறவிநோய் - உற்றகடல் நஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை நெஞ்சுகந்து கொள்ளா நெறி.
(மேற்கண்ட இரு பாடல்க ளில், முதல் பாடலின் இறுதிச் (அந்தம்) சீராகிய கற்று என்பது, அடுத்த பாடலின் முதல் (ஆதி) சீராக அமைந்து அந்தாதித் தEொடையாக வந்துள்ளது) பாடல் விளக்கம்: உலகில் நல்ல பல நூல்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தாலும், தனக்குக் கிடைத்த குருநாதரை மதியாதவருக்கு யாதEொரு பயனுமில்லை. ஈட்டிய செல்வங்களும், துய்த்த இன்பங்களும் எவ்விதப் பயனுமின்றி வீணே கெட்டழியும். எனவே, சொல்லுதற்கு அரிய அறிவுப் பொருளாகவும் சுடராகவும் தந்தையாகவும் விளங்கும் அருணகிரியில் (திருவண்ணாமலை) கோவில் கொண்டுள்ள அண்ணாமலை அண்ணலைக் குருவாகப் போற்றி வாழ்வாயாக! இறைவன் பாற்கடலில் எழுந்த நஞ்சினைத் தனது கண்டத்தில் அடக்கிய கருணையாளன்.
அவனது திருவடியாகிய அருளை நெறியாகக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறில்லாமல், எவ்வளவுதான் கற்றாலும், நல்ல குலத்திலே பிறந்தாலும் வினைகள் நீங்கிவிடுமா? இல்லையே! கலம்பகம் அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம் (கலம் – பன்னிரண்டு; பகம் – ஆறு).
அவற்றுள் ‘அம்மானை‘ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட,
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →