generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 43poem

திருக்காவலூர்க் கலம்பகம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

திருக்காவலூர்க் கலம்பகம் சீர்த்ததிருக் காவல்நல்லூர்த் தேவஅணங்கு தாள்கமலம் நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனகாண் அம்மானை நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனஎன்று ஆம்ஆகில் ஆர்த்ததிரு வண்டுஉவப்ப ஆங்குஅலரா அம்மானை போர்த்ததிருச் சோதிஇன்புஅப் போதுஅலரும் அம்மானை பாடல் விளக்கம் : முதல் பெண் கூறுவது: பெருமைமிக்க செல்வமுடைய திருக்காவலூரின் தெய்வப்பெண் அடைக்கல அன்னை. அவள் திருவடிகளாகிய தாமரை மலர்கள் குளிர்ந்த நிலவின்மீது பொருந்தி உள்ள அதிசயத்தைப்பார். இரண்டாம் பெண் வினாவுதல்: ” நிலவில் அன்னையின் தாமரை போன்ற திருவடி பொருந்தி உள்ளது” என நீ கூறுகின்றாய். அது உண்மை. ஆனால் நிலவு உள்ள இடத்தில் தாமரை மலர்கள் மலருமா? மூன்றாம் பெண் முடித்தல்: அன்னையின் அருளாகிய,”கதிரவன் நிகர்த்த சோதியின் இன்பத்தில் தாமரைகள் மலர்வது இயல்புதானே” என்று முடிக்கின்றாள். பரணி போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும். தக்கயாகப்பரணி சிரமும் சிரமும் செறிந்தன சரமும் சரமும் தறிப்பவே கனமும் கனமும் கனைத்தன சினமும் சினமும் சிறக்கவே கடையும் கடையும் கலித்தன தொடையும் தொடையும் துரப்பவே தாரும் தாரும் தழைத்தன தேரும் தேரும் திளைப்பவே தோலும் தோலும் துவைத்தன கோலும் கோலும் குளிப்பவே!

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →