பிள்ளைத்தமிழ் கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாடுவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும், முதல் ஏழு பருவங்களோடு இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பருவங்கள் அமைத்துப் பாடுவது பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் குறிப்பிடுவர். நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி செங்கீரைப் பருவத்தில் அமைந்ததEொரு பாடலாகும். செங்கீரை, பிள்ளைத்தமிழில் இரண்டாவது பருவமாகும். பொருள் புரிந்து கொள்ளமுடியாத வகையில் குழந்தை ங்க ங்க என்று ஓசை எழுப்பக் கேட்டுத் தாய் மகிழும் பருவமாகும். தEொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையை ஊன்றி உடம பை அசைத்து ஆடுதலைச் செங்கீரைப்பருவம் என்பர்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 45poem
பிள்ளைத்தமிழ்
Chapter 62: 37 · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →