தEொடரியல் பகுப்பாய்வி
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தEொடரியல் பகுப்பாய்வி?
தEொடரியல் பகுப்பாய்வி தொடரியல் செயலாக்கத்தைக் கணினிவழி செய்யும் கருவியே தொடரியல் பகுப்பாய்வி. அனைத்துச் சொற்களுக்கும் மொழியியல் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் இலக்கணக் குறிப்பைக் கொண்டு இக்கருவி செயல்படும். அதாவது அனைத்துவகை பெயர், வினை, இடைச்சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகைப் பகுப்பு அத் தொடரிலுள்ள ஒவ்வோர் அலகையும் இனம் காட்டும். அதன்வழி ஒரு பனுவலில் (Text) சொற்றொடர்களைத் தொடர்பகுப்பி பிரிக்கும். பிறகு, அதிலுள்ள தொடரைக் கண்டறியும். பின் அத் தொடரின் தலைச் சொல்லை இனங்காணும். அதனைப் பகுத்து அதன் இலக்கணக்கூறுகளைக் கண்டறியும். இது எந்திர மொழிபெயர்ப்புக்குப் பெரிதும் பயன்படும்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 259
Read from the source
Complete lesson
தEொடரியல் பகுப்பாய்வி தொடரியல் செயலாக்கத்தைக் கணினிவழி செய்யும் கருவியே தொடரியல் பகுப்பாய்வி. அனைத்துச் சொற்களுக்கும் மொழியியல் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் இலக்கணக் குறிப்பைக் கொண்டு இக்கருவி செயல்படும். அதாவது அனைத்துவகை பெயர், வினை, இடைச்சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகைப் பகுப்பு அத் தொடரிலுள்ள ஒவ்வோர் அலகையும் இனம் காட்டும்.
அதன்வழி ஒரு பனுவலில் (Text) சொற்றொடர்களைத் தொடர்பகுப்பி பிரிக்கும். பிறகு, அதிலுள்ள தொடரைக் கண்டறியும். பின் அத் தொடரின் தலைச் சொல்லை இனங்காணும். அதனைப் பகுத்து அதன் இலக்கணக்கூறுகளைக் கண்டறியும்.
இது எந்திர மொழிபெயர்ப்புக்குப் பெரிதும் பயன்படும். ‘இராமன் சீதையை மணந்தான்’ என்ற சொற்றொடர் வரிசையிலிருந்து பின்வரும் பகுத்தாயப்பட்ட கிளை அமைப்பைப் பெறல ம். (தொ- தொடர் ; பெ.தொ- பெயர்த்தொடர் ; பெ-பெயர் ; வி.தொ-வினைத்தொடர் ; வே.தொ- வேற்றுமைத் தொடர் ; வி- வினை; வே.உ - வேற்றுமை உருபு) இக்கருவி, தொடரில் இலக்கணப்பிழை இருக்கிறதா? இல்லையா?
என்பதைக் கண்டறிந்து திருத்தும். இலக்கணப் பிழைதிருத்தியை உருவாக்குவதற்கும் இத் தொடரியல் பகுப்பாய்விதான் உதவும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →