📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 37poem

தமிழகத்தில் பக்திநெறி

Chapter 48: தமிழகத்தில் பக்திநெறி · ADVANCED TAMIL

தமிழகத்தில் பக்திநெறி சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் இயற்கையை முன்நிறுத்திய வழிபாட்டு முறைகளும் (பராய்க்கடன், வெறியாட்டு போன்ற சடங்குகள்) நம்பிக்கைகளும் இருந்தன. அக்காலகட்டத்தில் வைதிக நெறியும், இதனை மறுத்த சமண பௌத்த நெறிகளும் தமிழகத்தில் பரவின. சமண பௌத்த சமயங்கள், ”உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன; இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனிதன் மாறவேண்டும்” என்று வலியுறுத்தின. சமயப் பெரியோர் அருளுணர்வுடையோராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர். மேலும், ”பிறவா நிலையை அடைவதற்குத் துறவறமே சிறந்த வழி” என்ற அறவியல் கருத்து நிலவியது. உலகில் உள்ள நிலையில்லாத இன்பங்களை ஒதுக்கி, நிலையான வீடுபேற்றை நாடுவதே கடமை என்று கருதும் நிலை உருவானது. இச்சூழலில், நாயன்மார்களும் ஆழ்வார்களும் தEோன்றி ”உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம்; இறைவன் அன்பின் வடிவானவன்; அன்பு ஒன்றே அவனை அடையும் வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர். ஊர்கள் தEோறும் கோவில்களுக்குச் சென்று இசைப்பாடல்களால் மனமுருக இறைவனைப் பாடிப் பரவினர். அப்பாடல்கள், கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுமாறு எளிய இனிய தமிழில் இருந்தன. இறைவனை, ஆண்டான், தந்தை, தEோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →