தென்கச்சி கோ. சுவாமிநாதன்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தென்கச்சி கோ. சுவாமிநாதன்?
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (இன்று ஒரு தகவல் - நன்னெறிக் கதைகள்) அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள்நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். இவர் தொடக்கக் கல்வியைச் சொந்த ஊரிலும், கல்லூரிக் கல்வியைக் கும்பகோணத்திலும் வேளாண் கல்வியைக் கோயம்புத்தூரிலும் பயின்றார். வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். வானொலியில் இவரது பேச்சைக் கேட்பதற்காகவே பெருமளவிலான மக்கள் காத்திருந்தனர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 236
Read from the source
Complete lesson
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (இன்று ஒரு தகவல் - நன்னெறிக் கதைகள்) அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள்நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். இவர் தொடக்கக் கல்வியைச் சொந்த ஊரிலும், கல்லூரிக் கல்வியைக் கும்பகோணத்திலும் வேளாண் கல்வியைக் கோயம்புத்தூரிலும் பயின்றார். வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர் தென்கச்சி கோ.
சுவாமிநாதன். வானொலியில் இவரது பேச்சைக் கேட்பதற்காகவே பெருமளவிலான மக்கள் காத்திருந்தனர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.
அதன்பிறகு, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேளாண் பிரிவு இயக்குநராக இருந்தபோது ‘வீடும் வயலும்’ என்னும் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நீதிநெறிகளை வழங்கிவந்தார். தமிழ்நாடு அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவரது கதைகள் மக்களைப் புதிய நோக்கில் சிந்திக்கத் தூண்டின.
இக்கதைகள், மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவித்து, அவர்களிடம் மனிதநேயச் சிந்தனைகளை விதைப்பனவாக அமைந்திருந்தன. இவருடைய முகத்தைப் பார்க்காத வானொலி நேயர்களும் இவருடைய குரலைக் கேட்டவுடன் ‘தென்கச்சியார் பேசுகிறார்’ என்று சொல்லும் அளவிற்கு அனைவர் மனத்திலும் தம் குரலைப் பதிவு செய்தவர். இவர் கதை சொல்லும்போது அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனத்திலும் தொக்கி நிற்கும். அவர் கூறும் நன்னெறிக் கதையின் முடிவில் ஒரு நகைச்சுவையினையும் கூறி முடிப்பார்.
அவர் சிரிக்காமல் சொல்லும் நகைச்சுவைகள் மற்றவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. தென்கச்சியார் நடையில் கதை சொல்லிப் பழகுவோம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கணும். அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது.
அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார். ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்க்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன்.
இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்க்கிட்டிருக்காங்க.... வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது. ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டுப் பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →