generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 146grammar_exercise

திரைக்கலை நுட்பங்கள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about திரைக்கலை நுட்பங்கள்?

திரைக்கலை நுட்பங்கள் திரைப்படம் தயாரித்தல் ஒரு கலை. காட்சிகளின் ஒளிப்பதிவும் அக்காட்சிகளைப் படமாக்கும் நுட்பமும் முதன்மையான ஒன்று. காட்சிகளின் வெளிப்பாட்டு நுட்பமும் பின்னணி இசையும் கதைக்குள் பார்வையாளரை ஈர்த்துக்கொள்பவை. நாம் திரையில் பார்க்கும் செவ்வகச் சட்டகத்திற்குள்(Frame) பல்வேறு திரைக்கலை நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டரை மணி நேரத்தில் நாம் பார்த்துவிடக் கூடிய ஒரு திரைப்படத்தை எடுப்பதற்குத் திரைப்படக் குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அளப்பரியவை. திரைவெளியில் பயன்படுத்தப்படும் திரைக்கலை நுட்பங்களைத் தெரிந்துகொள்வதென்பது ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். கதை (Story) ஒரு நல்ல திரைப்படம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 146

Read from the source

Complete lesson

திரைக்கலை நுட்பங்கள் திரைப்படம் தயாரித்தல் ஒரு கலை. காட்சிகளின் ஒளிப்பதிவும் அக்காட்சிகளைப் படமாக்கும் நுட்பமும் முதன்மையான ஒன்று. காட்சிகளின் வெளிப்பாட்டு நுட்பமும் பின்னணி இசையும் கதைக்குள் பார்வையாளரை ஈர்த்துக்கொள்பவை. நாம் திரையில் பார்க்கும் செவ்வகச் சட்டகத்திற்குள்(Frame) பல்வேறு திரைக்கலை நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டரை மணி நேரத்தில் நாம் பார்த்துவிடக் கூடிய ஒரு திரைப்படத்தை எடுப்பதற்குத் திரைப்படக் குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அளப்பரியவை. திரைவெளியில் பயன்படுத்தப்படும் திரைக்கலை நுட்பங்களைத் தெரிந்துகொள்வதென்பது ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். கதை (Story) ஒரு நல்ல திரைப்படம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அதனால்தான் ‘கதை‘ திரைப்படத்தின் உயிர் என்று கருதப்படுகிறது.

ஒரு கதையை எப்படித் தேர்ந்தெடுப்பது? கதை, உணர்வுபூர்வமாக நம் மனநிலையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட கதையைத் திரைப்படத்திற்கேற்ற திரைக்கதையாக மாற்ற வேண்டும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →