generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 199grammar_exercise

திறனாய்வாளர்க்குரிய தகுதிகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about திறனாய்வாளர்க்குரிய தகுதிகள்?

ஓர் இலக்கியத்தைப் படைப்பது எவ்வளவு கடினமானதEோ, அவ்வளவு கடினமானது திறனாய்வு. ஏன்? திறனாய்வு செய்வதற்குரிய தகுதி இல்லாதவர்கள், இலக்கியத்தை மதிப்பீடு செய்தால், அந்தத் திறனாய்வு தரமிழந்து போகும். அதனால்தான் திறனாய்வாளர்கள், சில அடிப்படைத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; சில விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கவேண்டும். . நூல் புலமை: திறனாய்வாளர், தாம் திறனாய்வு செய்யும் இலக்கியத்தோ டு பிற இலக்கியங்களையும் ஒப்பிட்டுக் கூறவே ண்டியிருப்பதால், அவருக்குப் பல நூல்களைப் பற்றிய ஆழ்ந்த புலமை வேண்டும். . விரிந்த சிந்தனை: இலக்கியத்தைப் பன்முறையிலும் ஊடுருவிப் பார்ப்பதற்குத் திறனாய்வாளரின் சிந்தனைப் பரப்பு விரிதல் வேண்டும்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 199

Read from the source

Complete lesson

ஓர் இலக்கியத்தைப் படைப்பது எவ்வளவு கடினமானதEோ, அவ்வளவு கடினமானது திறனாய்வு. ஏன்? திறனாய்வு செய்வதற்குரிய தகுதி இல்லாதவர்கள், இலக்கியத்தை மதிப்பீடு செய்தால், அந்தத் திறனாய்வு தரமிழந்து போகும். அதனால்தான் திறனாய்வாளர்கள், சில அடிப்படைத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; சில விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கவேண்டும்.

. நூல் புலமை: திறனாய்வாளர், தாம் திறனாய்வு செய்யும் இலக்கியத்தோ டு பிற இலக்கியங்களையும் ஒப்பிட்டுக் கூறவே ண்டியிருப்பதால், அவருக்குப் பல நூல்களைப் பற்றிய ஆழ்ந்த புலமை வேண்டும். . விரிந்த சிந்தனை: இலக்கியத்தைப் பன்முறையிலும் ஊடுருவிப் பார்ப்பதற்குத் திறனாய்வாளரின் சிந்தனைப் பரப்பு விரிதல் வேண்டும்.

இலக்கியத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை, அது சொல்லப்பட்ட முறையிலேயே புரிந்துகொள்ள இச்சிந்தனை உதவும். . பரந்த அறிவு: இலக்கியக் கூறுகளைத் தEொடர்புபடுத்தி அறிய, பரந்த அறிவு தேவை. திறனாய்வாளர், தாம் எடுத்துக்கொண்ட பொருள் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் என எதுவாக இருந்தாலும், அப் பொருள் தEொடர்பான பல நூல்களையும் கற்று, புலமை பெற்றவராய் இருத்தல் வேண்டும்.

. இலக்கியப் பயிற்சி: எந்த ஒரு நூலிலும் உயிர்ப்புடைய பகுதிகளும் பொ துவான பகுதிகளும் இருக்கும். அந்நூலைப் பன்முறை படித்தால்தான், அவ்விரு பகுதியையும் பிரித்தறிய இயலும். ஆகையால், திறனாய்வு செய்பவர், குறிப்பிட்ட இலக்கியத்தில் பயிற்சி பெற்றிருத்தல் இன்றியமையாதது.

. நடுவுநிலைமை: திறனாய்வாளர், தம் விருப்புவெறுப்புக்கு இடமளிக்காதவாறு திறனாய்வு செய்தல் வேண்டும். தம்முடைய நோக்கத்தை இலக்கியத்தில் புகுத்தாமல், படை ப்பாளியின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு திறனாய்வு செய்யவேண்டும். உள்ளது உள்ளபடி, நிறைகுறைகளையும் சேர்த்தே மதிப்பிட வேண்டும்.

வள்ளுவர் வாய்மொழிக்கேற்பச் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் இருத்தல் வேண்டும். அதே வேளையில் நூலின் குணம், குற்றம் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து, அவற்றுள் எது

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →