generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 261grammar_exercise

எந்திர மொழிபெயர்ப்பு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about எந்திர மொழிபெயர்ப்பு?

எந்திர மொழிபெயர்ப்பு இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ, பனுவலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது எந்திர மொழிபெயர்ப்பு. இது கணினி மொழியியலின் ஒரு பிரிவாகும். மூல மொழியின் (Source Language) பொருளைக் கணினி மொழிக்கு மாற்றி, பின்னர் இலக்கு மொழியில் (Target Language) அதனை மீண்டும் பெயர்ப்பதே எந்திர மொழிபெயர்ப்பு. மூலமொழிப் பனுவலை இலக்கு மொழிக்கு மாற்ற மூலமொழியின் கூறுகள் அனைத்தும், அதாவது இலக்கணம், பொருண்மை, தொடர், மரபுத் தொடர் முதலானவற்றைப் பற்றியும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அத்துடன் அம் மொழியின் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்திருக்க வேண்டும்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 261

Read from the source

Complete lesson

எந்திர மொழிபெயர்ப்பு இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ, பனுவலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது எந்திர மொழிபெயர்ப்பு. இது கணினி மொழியியலின் ஒரு பிரிவாகும். மூல மொழியின் (Source Language) பொருளைக் கணினி மொழிக்கு மாற்றி, பின்னர் இலக்கு மொழியில் (Target Language) அதனை மீண்டும் பெயர்ப்பதே எந்திர மொழிபெயர்ப்பு. மூலமொழிப் பனுவலை இலக்கு மொழிக்கு மாற்ற மூலமொழியின் கூறுகள் அனைத்தும், அதாவது இலக்கணம், பொருண்மை, தொடர், மரபுத் தொடர் முதலானவற்றைப் பற்றியும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அத்துடன் அம் மொழியின் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்திருக்க வேண்டும். இவ்வகையில் அகராதி மொழிபெயர்ப்பு, புள்ளிவிவர மொழிபெயர்ப்பு, எடுத்துக்காட்டுகளை அடியொற்றிய மொழிபெயர்ப்பு, மொழிச்சூழல் அடிப்படையிலான மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சுட்டலாம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →