காப்பியச் சுருக்கம் ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம். இந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன். தன் மனைவி விசயையோடு அரண்மனை அந்தப்புரத்திலே தங்கியிருக்க, நாட்டைக் கவனித்து வந்த அமைச்சன் கட்டியங்காரன் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். மயில்பொறி ஒன்றின் மூலம் தப்பிய விசயை, இராசமாபுரத்தின் இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள். சீவகன் பிறந்தபோது அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள். அக்குழந்தை தும்மியபொழுது ‘சீவ‘ என்ற வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான். சீவகனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் ‘சீவகசிந்தாமணி‘ எனப்பெயர் பெற்றது. கந்துகடன் என்ற வணிகன் சீவகனை எடுத்து வளர்க்கிறான். அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார். தன்னிகரில்லாத் தலைவனாக விளங்கும் சீவகன் தன் ஆற்றலால் பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்து, கட்டியங்காரனைப் போரில் வீழ்த்தி மீண்டும் தன் நாட்டைப் பெறுகிறான். காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதனால், இந்நூல் மணநூல் என்றும் அழைக்கப்படுகிறது. இறுதியில் அவன் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான். நாமகள் இலம்பகத்தில் வரும் நாட்டுச் சிறப்பில், திருத்தக்கதேவர் ஏமாங்கத நாட்டின் சிறப்பைப் பின்வருமாறு பாடுகிறார். சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சந்தன நீரொடு கலந்து தையலார் பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை யிந்திர வில்லெனக் கிடந்த வீதியே என்று சோழநாட்டின் வளமையைக் கற்பனையில் கண்டு கவி இயற்றுகிறார்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 31poem
காப்பியச் சுருக்கம்
Chapter 35: 23 · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →