generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 219poem

கல்வி நிகழ்ச்சிகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

கல்வி நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அஞ்சல்வழிக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் கல்வி ஒலிபரப்பில் வானொலி ஊடகம் மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறது. கல்வியைத் தரமானதாக்கவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப் புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் (SITE) திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது. இதனால் ஊக்கம் பெற்ற இந்தியக் கல்வியாளர்கள் தொலைக்காட்சியைக் கல்வி வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இல் இன்சாட் 1பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்துத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களும் ஒன்றோடொ ன்று இணைக்கப்பட்டன. இதன் காரணமாக இவ்வசதியைப் பயன்படுத்தி நாடெங்குமுள்ள கல்லூரி மாணவர்களுக்குப் பொதுவான கல்வி நிகழ்ச்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் 'நாடெங்கும் கல்லூரி வகுப்பு' என்னும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது. இத்திட்டம் ஆகஸ்ட் ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினங்களைத் தவிர ஏனைய நாள்களில் மதியம் மணிமுதல் மணிவரை இக்கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாலையில் மணிமுதல் மணிவரை மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டது. தமிழக அரசு கல்வி ஒளிபரப்பிற்கென 2019ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் தொலைக்காட்சி நிலையம் ஒன்றைத் தொடங்கி, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி தொடர்பான தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறல ம். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகின்றன. பெண்களுக்கான நிகழ்ச்சிகள். ஐ. நா. அவை ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது. அவ்வாண்டில் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்திலும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. பெண்களின் மன நலம், உடல் நலம் பேணும் நிகழ்ச்சிகளும் அவர்களின் உரிமைகள் சார்ந்த நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →