கிறித்துவம் இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது. சிலுவையில் அறையப்பட்டபோதும் பகைவர்க்கு அருளிய இயேசுவே உலக இரட்சகர்; இதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ? என அன்பு மேலிடும் இரட்சணிய யாத்திரிகப் பாடல் வழியே எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வினவுகிறார். கீண்டிருப்பு முளையுடலைக் கிழித்துருவி வதைப்புண்டு மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியுமென் றுரைத்தமொழி ஈண்டிவரே உலகினுக்கோர் இரட்சகரென் றெடுத்துரைக்கும். வேண்டுமோ இனிச்சான்றும் இதைவிடுத்து வேறொன்றே? பாடல் பொருள்: இரும்பு ஆணிகளால் உடலை த் துன்புறுத்தி சிதைத்தபோதும், “இச்செயலைச் செய்தோரை மன்னித்தருளும் ஆண்டவரே” என வேண்டிய இயேசுவே உலகைக் காக்க வந்த பெருமானாவார். பகைவர்க்கும் அருளிய இவ்வுயிரிரக்கப் பண்பு ஒன்றே இவர் இவ்வுலகைக் காக்க வந்தவர் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ? தமிழில் தEோன்றிய சமய இலக்கியங்கள் பலவாயினும் அவற்றின் நோக்கம், மனித மனங்களைப் பக்குவப்படுத்தி அன்பின் வழி செலுத்துதலே ஆகும். 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 41poem
கிறித்துவம்
Chapter 54: இசுலாம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →