இசுலாம் சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் முகம்மது நபிகளின் அருளில் ஆட்பட்டுப் பக்திமை தEோன்ற வியந்து போற்றுகின்றார். திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்த மருவினு மருவா யணுவினுக் கணுவாய் மதித்திடாப் பேரொளி யனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் பூதலத் துறைந்த பல் லுயிரின் கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. பாடல் பொருள்: மேன்மையிலும் மேன்மையாய், உண்மையிலும் உண்மையாய், அறிவிலும் அறிவாய்ச், சிறப்பினையுடைய நறுமணத்தினும் நறுமணமாய், அணுவுக்கும் அணுவாய்க், கணிக்கக் கூடாத பெரிய பிரகாச முழுவதும் ஒப்பிலும் ஒப்பாய் உருவிலும் உருவாய்ப் பூமியினிடத்துத் தங்கியபல ஜீவ ராசிகளின் கருவிலுங் கருவாய்ப் பெரிய உலகத்தை ஆட்சி செய்கின்ற அல்லாவை இருதயத்தின்கண் பொருந்தச் செய்வது கருத்தாகும்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 41poem
இசுலாம்
Chapter 54: இசுலாம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →