generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 62grammar_exercise

இடையில் பிரித்துச் சொல்லும் முறை

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about இடையில் பிரித்துச் சொல்லும் முறை?

இடையில் பிரித்துச் சொல்லும் முறை கதையைச் சொல்லிச் செல்லும்போது, அதன் ஒரு புள்ளியில் உட்சென்று மற்றொரு துணைநிகழ்வைச் சுருங்கச் சொல்லி, மீண்டும் கதைக்கு வருவது. மொழிப்பயன்பாட்டு அடிப்படையிலும் சொல்முறை உத்திகள் மாறுபடுவதுண்டு. அதிலும் மூன்று நிலைகள் உள்ளன . பொதுமொழியில் சொல்லும் முறை அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிற பொதுமொழியில் கதை சொல்லும் முறை. இஃது எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அமையலாம். . வட்டார மொழியில் சொல்லும் முறை அந்தந்த நிலம் சார்ந்து நிலவும் வட்டாரத்தின் பேச்சுவழக்கில் கதையைச் சொல்லிச் செல்லுதல். .

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 62

Read from the source

Complete lesson

இடையில் பிரித்துச் சொல்லும் முறை கதையைச் சொல்லிச் செல்லும்போது, அதன் ஒரு புள்ளியில் உட்சென்று மற்றொரு துணைநிகழ்வைச் சுருங்கச் சொல்லி, மீண்டும் கதைக்கு வருவது. மொழிப்பயன்பாட்டு அடிப்படையிலும் சொல்முறை உத்திகள் மாறுபடுவதுண்டு. அதிலும் மூன்று நிலைகள் உள்ளன . பொதுமொழியில் சொல்லும் முறை அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிற பொதுமொழியில் கதை சொல்லும் முறை.

இஃது எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அமையலாம். . வட்டார மொழியில் சொல்லும் முறை அந்தந்த நிலம் சார்ந்து நிலவும் வட்டாரத்தின் பேச்சுவழக்கில் கதையைச் சொல்லிச் செல்லுதல். .

பொது மற்றும் வட்டார மொழியில் சொல்லும் முறை கதாசிரியர் கதையின் விவரிப்பைப் பொதுவான மொழியிலும் கதைநிகழ்வை வட்டார வழக்கிலும் கலந்து சொல்லுதல் உரையாடல் ஒரு புதினத்தின் நிகழ்வுகளை உரையாடலே நகர்த்திச் செல்கிறது. பாத்திரங்களின் மனநிலை, உணர்ச்சி, உள் நோக்கம் ஆகியவற்றை வெளிக்கொணர்வது உரையாடலின் பணியாகும். பாத்திரங்கள் அவை பேசுகின்ற பேச்சின் மூலம் தம்மை அடையாளப்படுத்துகின்றன. உரையாடலின் அமைப்பே ஒரு புதினத்தைக் கலைப்படைப்பாக்குகிறது எனலாம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →