generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 57poem

இலட்சியவாதப் புதினங்கள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

இலட்சியவாதப் புதினங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் இலட்சியவாதத்தையும் முதன்மையாகக் கொண்டு இலட்சியவாதப் புதினங்கள் எழுதப்பட்டன. காந்திய இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி தமிழில் புதினங்கள் எழுதிய முன் னோடி காசி. வேங்கடரமணி. அவருடைய தேச பக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவ்வகைப் புதினங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்த க்கவராக மு.வரதராசனாரும் அறியப்படுகிறார். இவரது அகல் விளக்கு, கள்ளோ? காவியமோ?, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள் போன்றவை இலட்சியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது ( ) பெற்ற அகிலன் புதினங்கள் இலட்சியவாதத்தைப் பேசின. இலட்சியவாதிகளான நாயக, நாயகிகளின் சித்திரிப்புகளை நா. பார்த்தசாரதியின் படைப்புகளில் காணலாம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →