📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 39poem

சைவம்

Chapter 50: சைவம் · ADVANCED TAMIL

சைவம் திருநாவுக்கரசர் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை; நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிடுவதைப் பின்வரும் பாடலால் அறியலாம். படைக்கல மாகவுன் நாமத் தெழுத்தஞ்சுஎன் நாவிற்கொண்டேன்; இடைக்கல மல்லேன்; எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன்; துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூநீறணிந்துன் அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே! பாடல் பொருள்: அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! என்னை அறிவிலார் செய்கின்ற தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினை அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். ஒருபோதும் உனக்கு அடிமைத் தEொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எடுக்கும் பிறவிகள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப உனக்கு அடிமைத் தEொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பிரியேன். எப் பொழுதும் உன்னை மனத்தால் தEொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் இருக்கிறேன். தன்னைச்சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவன் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார். இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டு இறக்கம் செய்வான் - இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான். பாடல் பொருள்: இறைவனே எவ்வுயிரையும் தEோற்றுவிப்பவன். உயிர்களைக் காத்து அருள்பவனும் அவனே. இறைவனையே தன் தந்தை எனப்போற்றிப்பரவும் அடியவர்களுக்கு எவ்வளவு கொடிய துயரம் வரினும் அதை உடனே மாற்றிவிடுவானும் அவ்விறைவனே.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →