சேரல் – கேரல் – கேரலன் - கேரளன்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about சேரல் – கேரல் – கேரலன் - கேரளன்?
சங்க இலக்கியத்தில் மலைநாடு, ‘சாரல்நாடு‘ எனச் சொல்லப்படுகிறது. சாரல் என்னும் இச்சொல், ‘சேரல்‘ எனத் திரிந்து, மலைநாட்டு அரசர்களைக் குறித்துள்ளது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், குடக்கோ இளஞ்சேரல் போல ச் சங்க காலத்திலேயே அரசர்கள் பெயரில் இச்சொல் வழக்கு பெற்றுள்ளது. சேரல் என்னும் இச்சொல், பிறகு ‘சேரலன்‘ எனத் திரிந்தது. சீர்த்தி - கீர்த்தி; செம்பு – கெம்பு போல் சகர, ககர மாற்றத்தில் ‘சேரலன்‘ பிறகு, ‘கேரலன்‘ ஆனது. மங்கலம் – மங்களம்; மெல்ல – மெள்ள போல ல – ள போலிமரபில் கேரலம் – கேரளம் ஆனது. இக் கேரளம் சொல்லே இன்று ‘கேரளா‘ (KERALA) எனப்படுகிறது. புழை என்பது, ‘துளையை‘க் குறிக்கும் தமிழ்ச்சொல். நீர் ஓடும் துளையுள்ள இடமே புழைக்கடை. பேச்சுவழக்கில், இப் புழைக்கடை, புழக்கடை எனப்படும்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 193
Read from the source
Complete lesson
சங்க இலக்கியத்தில் மலைநாடு, ‘சாரல்நாடு‘ எனச் சொல்லப்படுகிறது. சாரல் என்னும் இச்சொல், ‘சேரல்‘ எனத் திரிந்து, மலைநாட்டு அரசர்களைக் குறித்துள்ளது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், குடக்கோ இளஞ்சேரல் போல ச் சங்க காலத்திலேயே அரசர்கள் பெயரில் இச்சொல் வழக்கு பெற்றுள்ளது. சேரல் என்னும் இச்சொல், பிறகு ‘சேரலன்‘ எனத் திரிந்தது.
சீர்த்தி - கீர்த்தி; செம்பு – கெம்பு போல் சகர, ககர மாற்றத்தில் ‘சேரலன்‘ பிறகு, ‘கேரலன்‘ ஆனது. மங்கலம் – மங்களம்; மெல்ல – மெள்ள போல ல – ள போலிமரபில் கேரலம் – கேரளம் ஆனது. இக் கேரளம் சொல்லே இன்று ‘கேரளா‘ (KERALA) எனப்படுகிறது. புழை என்பது, ‘துளையை‘க் குறிக்கும் தமிழ்ச்சொல்.
நீர் ஓடும் துளையுள்ள இடமே புழைக்கடை. பேச்சுவழக்கில், இப் புழைக்கடை, புழக்கடை எனப்படும். உள்துளையுடைய காய், ‘புழல்காய்‘. அதுவே, பிறகு ‘புடல்காய்‘ ஆனது.
நாழி + உரி = நாடுரி எனத் திரியுமென்பார்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →