செவ்வியல் அறிமுகம் உலகளவில் ‘ செவ்வியல்’ என்ற பொருளில் ’கிளாசிசம்’ (classism) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ’கிளாசிகஸ்’ (Classicus) என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ’செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது.
செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைத ல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். தEொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண்பு, நடுவு நிலைமை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை வெளிப்பாடு, மொழிக்கோட்பாடு போன்ற தகுதிக் கோட்பாடுகளைச் செவ்வியலுக்கான தன்மைகளாக அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.