generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 187grammar_exercise

சிறப்புப் பொருட்பேறு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about சிறப்புப் பொருட்பேறு?

சிறப்புப் பொருட்பேறு பழந்தமிழில், ‘பொன்‘ என்னும் சொல் செம்பு, தங்கம், வெள்ளி, இரும்பு போன றவற்றைக் குறிப்பதற்குப் பொதுவான பெயராக வழங்கியது. செம்பொன், வெண்பொன், கரும்பொன் என்றே வழக்கில் இருந்தன. இப்போது, தங்கத்தை மட்டுமே குறிக்கிறது. ஆகவே, முன்னர்ப் பல வற்றிற்கும் பொதுவாக வழங்கிய சொற்கள், அவற்றுள் ஒன்றை மட்டுமே குறிப்பதாக வருவனவற்றைச் சிறப்புப் பொருட்பேறு என்கிறோம். மேலும், சில எடுத்துக்காட்டுகள். எள்ளின் நெய், பாலின் நெய் என்பனவற்றைக் குறித்த ‘நெய்‘ என்னும் சொல், இப்போது, பாலின் நெய்யை மட்டும் குறிக்கிறது. விலங்குகளைப் பொதுவாகக் குறித்த ‘மான்‘ என்னும் சொல் இப்போது, மான் என்னும் ஒரு விலங்கினத்தை மட்டுமே குறிக்கிறது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 187

Read from the source

Complete lesson

சிறப்புப் பொருட்பேறு பழந்தமிழில், ‘பொன்‘ என்னும் சொல் செம்பு, தங்கம், வெள்ளி, இரும்பு போன றவற்றைக் குறிப்பதற்குப் பொதுவான பெயராக வழங்கியது. செம்பொன், வெண்பொன், கரும்பொன் என்றே வழக்கில் இருந்தன. இப்போது, தங்கத்தை மட்டுமே குறிக்கிறது. ஆகவே, முன்னர்ப் பல வற்றிற்கும் பொதுவாக வழங்கிய சொற்கள், அவற்றுள் ஒன்றை மட்டுமே குறிப்பதாக வருவனவற்றைச் சிறப்புப் பொருட்பேறு என்கிறோம்.

மேலும், சில எடுத்துக்காட்டுகள். எள்ளின் நெய், பாலின் நெய் என்பனவற்றைக் குறித்த ‘நெய்‘ என்னும் சொல், இப்போது, பாலின் நெய்யை மட்டும் குறிக்கிறது. விலங்குகளைப் பொதுவாகக் குறித்த ‘மான்‘ என்னும் சொல் இப்போது, மான் என்னும் ஒரு விலங்கினத்தை மட்டுமே குறிக்கிறது. பழைமை யானவற்றை எல்லாம் குறித்த ‘பழைமை ‘ என்னும் சொல், இப்போது, பழை ய சோற்றை மட்டும் குறிக்கிறது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →