மென்பொருள்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
மென்பொருள் இயக்க முறைமை [operating system] OS எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த மென்பொருளானது வன்பொருள், பயன்பாட்டு மென்பொருள் (Application programing interface software) மற்றும் பயனர்களுக்கு (USERS) இடையே பாலமாக இருக்கும் ஓர் இடைமுகமாகும். திறன்பே சிகளுக்கு ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி இயக்க முறைமை, வெப் ஓஎஸ், ஐஓஎஸ், சிம்பியன், விண் டோஸ் இயக்க முறைமை மற்றும் படா உட்பட பல வகையான இயக்க முறைமைகள் (OS) உள்ளன. இவற்றுள் ஆப்பிள் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகியவை மிகவும் பரவலாக அறியப்பட்ட இயக்கமுறைமைகள் ஆகும். இயக்க முறைமைகள் பயனர்களுக்குத் தன்னுதவிக் கருவிகள், விளையாட்டுகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக் கருவிகளைப் பதிவிறக்க அனுமதிக்கின்றன. பயனர்கள் தாங்களே செயலிகளை உருவாக்கி அவற்றை இயக்க முறைமைகள் மூலம் வெளியிடவும் முடியும். திறன்பே சி தொலைத் தொடர்பு, பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றை மட்டுமல்லாது பல்வேறு பணிகளையும் சேவைகளையும் பெறவும் பயன்படுகிறது. அதற்குத் திறன்பே சிகளில் இயங்கும் 'செல்பேசிச் செயலிகள்' (Mobile Apps) தேவை.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →