generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 272poem

மின்னூல் உருவாக்கம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

தமிழில் அச்சு நூல்களைப் போன்றும் அவற்றைவிட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் இணைய வெளியில் மின்னூல்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அதன் தாக்கத்தால் அச்சு வடிவில் வெளிவந்த நூல்களும் இன்று மின்னூல்களாகப் புத்தாக்கம் பெற்று வெளிவருகின்றன. புதிதாக வெளிவரும் நூல்களை இருவடிவிலும் வெளியிடும் போக்கு, மின்னூலின் வளர்ச்சியையும் உலகளாவிய பரவலையும் தேவையையும் காட்டுகின்றது. மேலும், உயர்ந்த தரமான நூல்கள் எளிய முறையில், குறைந்த செலவில், குறுகிய காலத்தில், உலகெங்கிலும் உள்ள வாசகர்களைச் சென்றடையும் நிலை சாத்தியமாகி உள்ளது. எனவே, மின்னூல்களாக மட்டுமே வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்னூல்களின் அமைப்பு, பயன்பாடு, உருவாக்கும் முறை ஆகியவற்றை இப்பாடப்பகுதி விவரிக்கின்றது. மின்னூல் (e-Book) பொதுவாக நாம் அச்சிடப்பட்ட நூல்களைப் பயன்படுத்தி வருகிறோ ம். அச்சுவடிவில் வெளிவரும் நூலைப் போல் மின்னணுவியல் முறையில் அமைந்த நூலே மின்னூல். மின்னூலைத் தரவிறக்கம் செய்தோ, இணையத்தில் நேரடியாகவோ படிக்க இயலும். அதற்கென உருவாக்கப்பட்ட மின்படிப்பான்கள் (e-Reader) மூலமாகவும் மின்னூல்களை வாசிக்கலாம். மின்னூல்களின் அமைப்பு மின்னூல்கள் மின்னணுவியல் முறையில் எண்ம (Digital) ஊடகங்கள் மூலம் வாசிக்கத் தருவதற்காக உருவாக்கப்படுகின்றன. மின்னூல்களை உருவாக்கப் பயன்படும் அமைப்புகளுள் எளிமையானதும் சிறப்பானதுமான மூன்றைக் காண்போம். . பி.டி.எஃப் (PDF) அமைப்பு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →