நடப்பியம் (Realism)
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
நடப்பியம் (Realism) இயற்பண்பியத்தின் மறுதலையாக உருவானதே நடப்பியம். நடந்த எல்லாவற்றையும் காலம், இடம் என்ற அளவில் முழுமையாக எழுத முடியாது. ஆகவே, நடந்தனவற்றில் உண்மையின் பக்கமாக, எது சரியானது எனச் சுட்டிக்காட்டும் போ க்கே இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையாக அமையவேண்டும் என்று, வலியுறுத்தியவர்கள் உருவாக்கிய இலக்கியப் போக்கே நடப்பியம். அதிலும் மனித நேய நடப்பியம், விவரண நடப்பியம், ஆவண நடப்பியம், சமத்துவ நடப்பியம், மிகை நடப்பியம் எனப் பல வகைகள் உண்டு. நடப்பியம் அல்லாதன (Non-realism) நடப்பிய இலக்கியத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கும் முயற்சியில் அதன்மீது பல வகையான விமரிசனங்கள் எழுப்பப்பட்டன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான இலக்கியப் போக்குகளாக ஐரோப்பியத் திறனாய்வாளர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. குறியீட்டியம், அபத்தவியம், வெளிப்பாட்டியம், மனப்பதிவியம் எனப் பல வகை உண்டு. அவற்றை மேல் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →