நாககுமாரகாவியம் நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தEோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை. பிறவிச் சூழலில் இருந்து விடுபட்டு முக்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றி இக்கதை பேசுகிறது. திங்கள் முந்நான்கு யோகந் தீவினை யரிய நிற்பர் அங்கபூ வாதி நூலு ளரிப்பறத் தெளிந்த நெஞ்சிற் தங்கிய கருணை யார்ந்த தவமுனி யவர்கள் சொன்ன பொங்குநற் கவிக்க டறான் புகுந்துநீர்த் தெழுந்த தன்றே. தீவினைகள் நீங்கித் தம் நெஞ்சத்தில் கருணை உள்ளவர்களாகத் தவமுனிவர்கள் விளங்குவர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 33poem
நாககுமாரகாவியம்
Chapter 40: 25 · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →