நுழையும்முன்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about நுழையும்முன்?
நுழையும்முன் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் ஒரு கருவியே இலக்கணம். அக்கருவியானது, நம் அறிவையும் திறனை யும் வளர்த்தெடுப்பதEோடு, ஆர்வத்தையும் ஊட்டுதல் வேண்டும். அவற்றிற்கேற்ப, இவ்வியல் அமைந்துள்ளது; புதிய நோக்கில், பல்வேறு புதிய சிந்தனைகளைத் தூண்டி, இலக்கண ஆய்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. இவ்வியலில் மொழியியல், ஒப்பியல், திறனாய்வியல் ஆகிய களங்களில் கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழ், ஆங்கில மொழிகளின் தEொடரமைப்புக் கூறுகள், சொற்பொருள் மாற்றம் குறித்த சுவையான செய்திகள், சொற்களுக்குரிய வேர்மூலங்கள், இலக்கிய வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் துணைசெய்யும் திறனாய்வுக்கலை ஆகிய கட்டுரைகள், எளிமையாகவும் சுருக்கமாகவும் இவ்வியலில் விளக்கப்படுகின்றன.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 173
Read from the source
Complete lesson
நுழையும்முன் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் ஒரு கருவியே இலக்கணம். அக்கருவியானது, நம் அறிவையும் திறனை யும் வளர்த்தெடுப்பதEோடு, ஆர்வத்தையும் ஊட்டுதல் வேண்டும். அவற்றிற்கேற்ப, இவ்வியல் அமைந்துள்ளது; புதிய நோக்கில், பல்வேறு புதிய சிந்தனைகளைத் தூண்டி, இலக்கண ஆய்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. இவ்வியலில் மொழியியல், ஒப்பியல், திறனாய்வியல் ஆகிய களங்களில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
தமிழ், ஆங்கில மொழிகளின் தEொடரமைப்புக் கூறுகள், சொற்பொருள் மாற்றம் குறித்த சுவையான செய்திகள், சொற்களுக்குரிய வேர்மூலங்கள், இலக்கிய வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் துணைசெய்யும் திறனாய்வுக்கலை ஆகிய கட்டுரைகள், எளிமையாகவும் சுருக்கமாகவும் இவ்வியலில் விளக்கப்படுகின்றன. n தமிழ், ஆங்கிலம் – தொடரமைப்பு ஒப்பீடு n பொருண்மையும் சொற்பொருள் மாற்றமும் n வேர்ச்சொல் ஆய்வு – ஓர் அறிமுகம் n திறனாய்வு நுழையும்முன் n ஊடகவியல் சட்டங்கள் n மின்னணு ஊடக ஆளுமைகள் மனித நாகரிக வளர்ச்சியில் தகவல் தொடர்பின் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஊடகங்கள் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் என இரண்டு வகைப்படும்.
பதினோராம் வகுப்பில் அச்சு ஊடகங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன . இவ்வாண்டு மின்னணு ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, உள்கட்டமைப்பு, நிகழ்ச்சி உருவாக்கம் ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஊடகச் சட்டங்கள் குறித்தும் மின்னணு ஊடக ஆளுமைகள் குறித்தும் இப்பாடப்பகுதி பேசுகிறது. நுழையும்முன் n இலக்கியக்களம் – தீரா n செயற்களம் – மின்னூல் உருவாக்கம் மொழிகளின் காட்சிசாலை என்று புகழப்படும் இந்தியாவில் இயற்கை மொழிச் செயலாக்கம், கணினித் தொழில்நுட்பத்தில் மொழிப்பயன்பாட்டினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாகும்.
கணினியின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி, மொழித் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் புதிய மொழிப்பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்கவும் இது இன்றியமையாதது. அவ்வாறே, இன்று நினைத்த இடத்திற்குக் கணினியை எடுத்துச் சென்று பயன்படுத்துவதும் வளர்ந்து வரும் திறன்பேசிகளின் வரலாற்றை அறிந்துகொள்வதும் வாசிப்பு அனுபவத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும் மின்னூல் உருவாக்கம் பற்றி அறிந்துகொள்வதும் காலத்தின் தேவை.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →