generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 151definition

ஒளிப்பதிவு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about ஒளிப்பதிவு?

ஒளிப்பதிவு படப்பிடிப்புக் கருவி எல்லாவற்றையும் துணிப்புகளாகத்தான் படமாக்குகிறது. படத்தொகுப்பு மூலமாகத்தான் துணிப்புகள் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு துணிப்பும் ஒரு கோணத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இக்கோணம் படம் பார்ப்பவரின் கோணமா, அப்படம் எடுப்பவரின் கோணமா, கதாபாத்திரங்களின் கோணமா? என்று கேட்டால் இதற்குப் பதில் படப்பிடிப்புக் கருவி எல்லாக் கோணங்களிலிருந்தும் செயல்படுகிறது என்பதுதான். திரைப்படத்தின் முக்கிய கூறாக ஒளிப்பதிவு உள்ளது. ஒலி திரைமொழிக்கு உதவும் கூறுகளில் ஒன்று ஒலி. திரைப்படம் கண்ணால் பார்க்கப்பட்டும் காதால் கேட்கப்பட்டும் நுகரப்படுகிறது. பிம்பமும் ஒலியும் இணைந்து நிற்பதுதான் திரைப்பட மொழி.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 151

Read from the source

Complete lesson

ஒளிப்பதிவு படப்பிடிப்புக் கருவி எல்லாவற்றையும் துணிப்புகளாகத்தான் படமாக்குகிறது. படத்தொகுப்பு மூலமாகத்தான் துணிப்புகள் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு துணிப்பும் ஒரு கோணத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இக்கோணம் படம் பார்ப்பவரின் கோணமா, அப்படம் எடுப்பவரின் கோணமா, கதாபாத்திரங்களின் கோணமா?

என்று கேட்டால் இதற்குப் பதில் படப்பிடிப்புக் கருவி எல்லாக் கோணங்களிலிருந்தும் செயல்படுகிறது என்பதுதான். திரைப்படத்தின் முக்கிய கூறாக ஒளிப்பதிவு உள்ளது. ஒலி திரைமொழிக்கு உதவும் கூறுகளில் ஒன்று ஒலி. திரைப்படம் கண்ணால் பார்க்கப்பட்டும் காதால் கேட்கப்பட்டும் நுகரப்படுகிறது.

பிம்பமும் ஒலியும் இணைந்து நிற்பதுதான் திரைப்பட மொழி. திரைப்படங்களில் ஒலி, இசை, பாடல்களின் மெட்டு முதலான அனைத்திற்கும் இசையமைப்பாளர்தான் காரணகர்த்தா. திரைப்படங்களில் அமைக்கப்படும் ஒலியை இயல்பான ஒலி, மிகை ஒலி என்று இருபெரும்பிரிவாக வகைப்படுத்தலாம். ஒலிப்பதிவு திரைப்படத்தில் ஒலிப்பதிவு, நான்கு வித ஒலிகளை முதன்மைப்படுத்துகிறது.

. உரையாடல் . பாடல்கள் . பின்னணி இசை .

சிறப்பு ஒலிகள் படப்பிடிப்புக்குப் பிறகு ஒலிப்பதிவுக் கூடங்களில் இந்த நான்கு வகையான ஒலிகளையும் இணைத்தல் மூலம் ஒரே ஒலித்தடத்தில் இணைக்கிறார்கள்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →