உரையாடு இயலி [chat bot]
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
உரையாடு இயலி [chat bot] கணினியுடனான உரையாடலைச் சாத்தியப்படுத்தும் தொழில்நுட்ப ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உரையாடு இயலி அல்லது "சாட்பாட்- chatbot" இப்போது அதைச் சாத்தியப்படுத்தும் ஒரு மென்பொருளாகத் திகழ்கிறது. மனிதர்கள் ஒருவருடன் மற்றொருவர் இயல்பாக உரையாடுவதைப் போன்று, கணினியும் மனிதனும் உரையாடுவதைச் செயல்படுத்தும் ஒரு மென் பொருளே உரையாடு இயலி என்றழைக்கப்படுகிறது. எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ கணினிக்கு நாம் கட்டளைகளை இட, கணினி தன் செயற்கை அறிவால் அதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நமக்குப் பதிலளிக்கும். செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence) கூடிய மொழி மாதிரிகளுடன், உரையாடு இயலி உருவாக்கப்படுகிறது. எனவே, இதனால் கேள்வியின் சூழலைப் புரிந்துகொண்டு சிக்கலான பணிகளைச் செய்ய முடியும். இது கேள்விகளை, செய்யவேண்டிய செயல்களை உள்ளீடு (தட்டச்சு) வழியாகவோ அல்லது உரையாடல் வழியாகவோ பெற்று, பயனாளருடன் உரையாடலை நடத்துகிறது. அமேசான் எக்கோ, அலெக்சா, ஆப்பிள், மைக்ரோசாப்ட் கோர்டனா, கூகுள் அசிஸ்டென்ட் போன்ற உரையாடு இயலிகள் தற் போது பயன்பாட்டில் உள்ளன. இயலிகள் இன்று மின் வணிகம், சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் தொடர்பு, கல்வி, செய்தி, பொழுதுபோக்கு, நிதி மேலாண்மை, உணவு, விளையாட்டு, உடல்நலம் போன்ற துறைகளின் பல தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக மொழித் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படும் பயன்பாட்டுக் கருவிகள் மனித வாழ்வின் நவீன வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →