generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 273grammar_exercise

வடிவமைப்பு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about வடிவமைப்பு?

வடிவமைப்பு மின்னூல்களை பி.டி.எஃப் வடிவில் உருவாக்குவது மிகவும் எளிது. தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்படும் ஒரு நூலை, அச்சிடுவதற்குப் பதிலாக மின்னூல் வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பு. அச்சிடப்படும் நூலுக்கும் இதற்கும் வடிவமைப்பில் மாற்றம் ஏதுமில்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய அச்சு நூலுக்கான அனைத்துக் கூறுகளும் பி.டி.எஃப் மின்னூலிலும் பதிக்கப்படுகின்றன. மைக் ரோசாப்ட் வேர்டு, அடோப் இன்- டிசைன் போன்ற செயலிகளைக் கொண்டு இவ்வகை மின்னூல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகைக் கோப்புகளைச் சேமிக்க பி.டி.எஃப் ரைட்டர் என்னும் செயலி தேவை. திறமூலத் தரத்தில் (Open source) இது கிடைக்கும்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 273

Read from the source

Complete lesson

வடிவமைப்பு மின்னூல்களை பி.டி.எஃப் வடிவில் உருவாக்குவது மிகவும் எளிது. தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்படும் ஒரு நூலை, அச்சிடுவதற்குப் பதிலாக மின்னூல் வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பு. அச்சிடப்படும் நூலுக்கும் இதற்கும் வடிவமைப்பில் மாற்றம் ஏதுமில்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய அச்சு நூலுக்கான அனைத்துக் கூறுகளும் பி.டி.எஃப் மின்னூலிலும் பதிக்கப்படுகின்றன.

மைக் ரோசாப்ட் வேர்டு, அடோப் இன்- டிசைன் போன்ற செயலிகளைக் கொண்டு இவ்வகை மின்னூல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகைக் கோப்புகளைச் சேமிக்க பி.டி.எஃப் ரைட்டர் என்னும் செயலி தேவை. திறமூலத் தரத்தில் (Open source) இது கிடைக்கும். இவ்வமைப்பில் வடிவமைக்கப்படும் மின்னூலின் உள்ளடக்கப் பக்கத்தில் உள்ள தலைப்புகளை நூலின் பக்கங்களோடு இணைக்கலாம்.

வேறு எந்தப் புதுமையையும் இதில் செய்ய இயலாது. ஒருங்குறி எழுத்துருவிற்கு ஒத்துழைக்காத செயலிகளில் இவ்வடிவமைப்பைச் செய்வதைத் தவிர்த்தல் நலம். தாளில் விரல்களைக் கொண்டு பக்கங்களைப் புரட்டுவதைப்போல் மின்னூலில் சுட்டியைக் கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டவேண்டும். பி.டி.எஃப் அமைப்பில் உள்ள மின்னூலை வாசிக்க ‘பி.டி.எஃப் ரீடர்‘(PDF Reader) என்ற வாசிப்புச் செயலி தேவை.

நாம் வாசிக்கும் கருவியில் தோன்றும் பக்கத்தை, எழுத்தைப் பெரிதாகவோ சிறிதாகவோ காணமுடியும். அதற்கேற்றாற் போல் படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால், பக்கத்தின் தோற்றம் மாறாது. சான்றாக ஒரு பக்கத்தில் பத்து வரிகளும் இரு படங்களும் இருந்தால், எவ்வளவுதான் அளவு மாற்றம் செய்தாலும் அதே எண்ணிக்கையிலான வரிகளும் படங்களும் மட்டுமே அந்தப் பக்கத்தில் தோன்றும்.

இந்தப் பக்கத்தில் உள்ள வரிகள் அடுத்த பக்கத்திற்கோ, அடுத்த பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப் பக்கத்திற்கோ நகராது. வடிவமைப்பு இணையத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மீயுரைக் குறியீட்டு மொழியில் இணைய அமைப்பு மின்னூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையப் பக்கங்களைப் போல இதிலும் நகர்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்றவற்றைச் சேர்க்க முடியும் என்பது இதன் சிறப்பு. தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் புரட்டுவது போன்ற உணர்வு, படங்களையும் எழுத்து வரிகளையும் ஓரிடத்தில் இருந்து மற்றோ ர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கான பொருளை இன்னொரு கட்டத்தில் காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும் பக்கங்களைத் தேடுதல் முதலிய பல வசதிகளை இவ்வமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம்.

கணினி மொழிகளின் துணைகொண்டு, நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளையும் சேர்க்கமுடியும். இணையத் தொழில்நுட்பம் என்பதால் எல்லாவகைக் கணினிகளிலும் இவ்வமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல்களை வாசிக்க இயலும். தமிழ் ஒருங்குறித் தரத்திலான எழுத்துருவும் உலாவியும் இருந்தாலே போதும். இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்யும் வாய்ப்புகள் இருந்தாலும் சில குறைபாடுகளும் உள்ளன.

வடிவமைப்பு பி.டி.எஃப், இணைய அமைப்பிலான மின்னூல்களில் உள்ள குறைகளைக் களைவதற்கும் மின்னூலுக்கென்றே சில சிறப்பு வசதிகளைச் சேர்ப்பதற்கும் உருவாக்கப்பட்டதுதான் மின்-பதிப்பு எனும் புதிய மின்னூல் தரம். இவ்வமைப்பின்படி, மின்னூலில் சேர்க்கப்படும் அனைத்து வசதிகளையும் ஒரே கோப்பில் பதித்துச் சேமிக்கலாம். இணைய அமைப்பில் சேர்க்கப்படும் வசதிகளுக்கான கோப்புகளைத் தனித்தனியே சேமிக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை. அதனால், தேவையற்ற செயலிகளைத் தரவிறக்க ம் செய்வதும் இடப்பிரச்னையும் தவிர்க்கப்படுகிறது.

மின்-பதிப்பு அமைப்பில் சேர்க்கப்பட்ட வசதிகளுள் மூன்றைச் சிறப்பாகக் கூறல ம். . எழுத்துரு மாற்றத் தோடு வரிகளின் மறுவோட்டம் : தாளில் அச்சிடப்பட்ட நூலில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவையோ அதன் அளவையோ மாற்றுவது இயலாது. ஆனால், இவ்வமைப்பில் அமைந்த மின்னூலில் இரண்டையும் மாற்றலாம்.

உருவோ அளவோ மாறும்போது வரிகளின் அளவும் பக்கங்களின் ஓட்டமும் மாறும்படி மேம்படுத்தப்பட்டிருப்பது இதன் சிறப்பு. . நூலைப் பற்றிய விவரக்குறிப்பு: மின்னூல்கள் பரவலாகத் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் அவற்றை விற்கும் மின் அங்காடிகளில் நூலை விளம்பரப்படுத்த நூல்பற்றிய விவரக்குறிப்பு தேவை.

அதாவது, நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பு எண், பதிப்பிக்கப் பட்ட நாள் போன்ற விவரங்கள் முக்கியமானவை. இந்த விவரங்களையும் நூலிலேயே சேர்த்து, தேவைப்படும்போது முழுநூலையும் திறக்காமல் விவரங்களை மட்டும் வாசிக்கத் தரும் வசதியை மின்-பதிப்பு தருகிறது. . ஒன்றுக்கும் மேற்பட்ட நFோக்குநிலைகள்: மின்னூலை வாசிக்கும் கையடக்கக் கருவியைச் செங்குத்தாகவோ கிடைமட்டமாக வைத்து வாசிக்கலாம்.

வாசிப்பவரின் நோக்குநிலைக்கு ஏற்ப நூலும் மாற்றியமைக்கப்படுவது மின்- பதிப்பு வழங்கும் அடுத்த வசதி. மேற்கண்ட அனைத்து அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களை உருவாக்கலாம். நூலாசிரியருக்குக் கணினித் தொழில்நுட்பம் தெரியாதபோது, வல்லுநர் உதவியுடன் மின்னூலை உருவாக்கலாம். கணினியின் அடிப்படை இயக்க முறைகள் தெரிந்திருந்தால் போதும்.

நாமே தரமான மின்னூல்களை உருவாக்க முடியும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →