வேளாண்மை பழந்தமிழர் இயற்கைச்சூழல், பருவகாலம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிலத்தை நன்கு உழவு செய்யும் பாங்கு, விதைகளைத் தேர்வு செய்வதில் உள்ள அனுபவம், பயிர்நுட்ப அறிவு, நீர்ப்பாசன நுட்பம், வேளாண்மைக் காவல் பணி எனத் திணைகளின் அடிப்படையில் வேளாண்மையை முறைப்படுத்தி அதன் முழுப் பயனையும் தெரிந்து வைத்திருந்தனர். சங்கப்பாடல்கள்வழி தமிழர்தம் வேளாண்மை நுட்பத்தை அறிந்து இன்புறலாம். குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர் நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித் தொடுப்பு எறிந்துஉழுத துளர்படு துடவை அரிபுகு பொழுதின் இரியல் போகி வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன வளர்இளம் பிள்ளை தழீஇ குறுங்கால் கறை அணற் குறும்பூழ் கட்சி சேக்கும் வன்புலம் இறந்த பின்றை - பெரும்பாணாற்றுப்படை பாடல் பொருள்: செம்மையான உழவு செய்கின்ற மருதநில உழவர்களின் வீட்டில் உணவுப் பொருள்கள் நிறைந்திருக்கும். உழவில் பழக்கிய எருதுகளை ஏரில் பூட்டி யானையின் வாயை ஒத்த கலப்பையின் கொழு நிலத்தில் அழுந்துமாறு பலமுறை உழுது பயிரிடுவர். மீண்டும் உழுது களையெடுத்த புன்செய் நிலத்தில் அறுவடை காலத்தின் போது 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 20poem
வேளாண்மை
Chapter 20: 12 · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →