வேர்ச்சொல் ஆய்வுக் கோட்பாடு
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about வேர்ச்சொல் ஆய்வுக் கோட்பாடு?
வேர்ச்சொல் ஆய்வுக் கோட்பாடு இன்றைய உலக மாந்தர் அனைவரும், ‘மதிமாந்தர்‘ (Homo sapiens) எனப்படுவர். இவர்களின் மூலஇடம் இன்றைய ஆப்பிரிக்கா. ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்குமுன், இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, உலகம் முழுவதும் பரவினர். எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்துவிட்டனர். இதன்காரணமாகவே தென்னிந்தியா, மாந்தர்தம் மூலமொழி தEோன்றிய இடமாக இருக்கலாம் என வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள் இன்று கருதுகின்றனர். மொழி தEோன்றிய காலம் – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்னும் கருத்தினையும் இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள், மூலமொழி எது என்பதை இருகோட்பாட்டின் மூலம் ஆய்வுசெய்து வருகின்றனர்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 194
Read from the source
Complete lesson
வேர்ச்சொல் ஆய்வுக் கோட்பாடு இன்றைய உலக மாந்தர் அனைவரும், ‘மதிமாந்தர்‘ (Homo sapiens) எனப்படுவர். இவர்களின் மூலஇடம் இன்றைய ஆப்பிரிக்கா. ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்குமுன், இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, உலகம் முழுவதும் பரவினர். எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்துவிட்டனர்.
இதன்காரணமாகவே தென்னிந்தியா, மாந்தர்தம் மூலமொழி தEோன்றிய இடமாக இருக்கலாம் என வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள் இன்று கருதுகின்றனர். மொழி தEோன்றிய காலம் – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்னும் கருத்தினையும் இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள், மூலமொழி எது என்பதை இருகோட்பாட்டின் மூலம் ஆய்வுசெய்து வருகின்றனர். ஒன்று, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பேசப்படுகின்ற மொழிகள் யாவற்றிற்கும் உரிய மூலமொழியைக் கண்டறிவது.
இரண்டு, உலகம் முழுவதும் பேச ப்படுகின்ற மொழிகளுக்கு உரிய மூலமொழியைக் கண்டறிவது. முதலாவதை ‘நாசுதிராதிக்‘ (Nostratic Studies) ஆய்வு என்றும் இரண்டாவதைத் ‘தாய்மொழி‘ (Mother Tongue studies) ஆய்வு என்றும் கூறுகின்றனர்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →