கவிதைப்பேழை
Chapter 2: Class 12 Tamil · Part 4 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about கவிதைப்பேழை?
கவிதைப்பேழை மழைக்காலத்தில் சூ ரியனின் திடீர்ப் பயணம் காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள் அழிந்த மாயத்தில் வருத்தம் தோய்கிறது தலை யசைத்து உதறுகிறது மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர் இன்னு ம் நான் வீட்டுச்சுவரில் செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள் வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன் கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கின்றன போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன் பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 38
Read from the source
Complete lesson
கவிதைப்பேழை மழைக்காலத்தில் சூ ரியனின் திடீர்ப் பயணம் காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள் அழிந்த மாயத்தில் வருத்தம் தோய்கிறது தலை யசைத்து உதறுகிறது மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர் இன்னு ம் நான் வீட்டுச்சுவரில் செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள் வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன் கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கின்றன போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன் பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது. - அய்யப்ப மாதவ ன் இக்கவிதை 'அய்யப்ப மாதவன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்; இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்; 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானெ ன்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெ ளியிட்டுள்ளார். நூல்வெளி ‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக.
கற்பவை கற்றபின்... கவிதைப்பேழை சொல்லும் பொருளும் புதுப்பெயல் – புதுமழ ; ஆர்கலி – வெள்ளம்; கொடுங்கோல் – வளை ந்த கோல்; புலம்பு – தனிமை; கண்ணி – தலை யில் டும் மாலை ; கவுள் – கன்னம்; மா – விலங்கு. ‘வையகம் பனிப்ப வலனே ர்பு வளைஇப் பொய்யா வான ம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோ ல் கோவ லர் ஏறுடை இனநிரை வே றுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொ ள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க * மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் * . [ - ] - நக்கீரர் பாடலின் பொருள் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் ழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழ யைப் பொழிந்து.
தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளை ந்த கோலை யுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர், தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலை யால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலை யில் டியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் டேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. குளிர் மிகுதியால் விலங்குகள் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின;
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →