இயல் 2
Chapter 3: Class 12 Tamil · Part 2 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இயல் 2?
இயல் பயிர்கள் மூழ்காமல் மொத்தக் கிராம மும் தப்பித்துக் கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்தப் பே ய்ச் செடிகளை ப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும். ”சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லே சான காரியமா?” இந்த மலை ப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனை க்குப் பிறகு வழி தெரிந்து. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான் . நடந்தவனின் பார்வை, வடிவாய்க்ககால் வளை வில் வலைபோ ட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்து. நின்றான். ”இந்தச் சனியன்பிடிச்ச காட்டாமணக்குச் செடியாலதாண்டா தண்ணி வடிய மாட்டேங்குது…” மாரி இவனை த் திரும்பிப் பார்த்ததான்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 41
Read from the source
Complete lesson
இயல் பயிர்கள் மூழ்காமல் மொத்தக் கிராம மும் தப்பித்துக் கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்தப் பே ய்ச் செடிகளை ப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும். ”சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லே சான காரியமா?” இந்த மலை ப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனை க்குப் பிறகு வழி தெரிந்து.
உற்சாகமாக நடக்கத் தொடங்கினான் . நடந்தவனின் பார்வை, வடிவாய்க்ககால் வளை வில் வலைபோ ட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்து. நின்றான். ”இந்தச் சனியன்பிடிச்ச காட்டாமணக்குச் செடியாலதாண்டா தண்ணி வடிய மாட்டேங்குது…” மாரி இவனை த் திரும்பிப் பார்த்ததான்.
”யாரு இல்லேன்னா…” ”அதிலும் நம்மூரு வடிமதகு இருக்கே… அது வெள்ளைக்காரன் காலத்துலே நம்மூருக்குன்னே ரொம்ப டெக்னிக்கா கட்டுனது. கடலே திரண்டு வந்து உள்ளே நுழைஞ்சாலும் அப்படியே முழுங்கிட்டுக் ’கம்’முன்னு இருக்கும், “யாரு இல்லேன்னா…” ”ஊர்க்ககாரங்க எல் லோரும் ஒண்ணு சேந் தோம்னு வச்சுக்க. ஆளுக் கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்ககாலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும்.” இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்ததான்.
பார்த்தோடு சரி. பிறகு வலையை வாய்க்ககாலுக்குள் இறக்குவதும் தடம் பார்த்து மேலே தூக்கி, துள்ளும் கெண்டை மீன்களை அள்ளிப் பக்கத்திலிருந்த மீன் கூடைக்குள் போடுவதுமாகக் காரியத்திலேயே கண்ணாயிருந்தான் மாரி. பொறுமை யிழந்து போனான் மருதன். ” ஏண்டா மாரி.
நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைம ரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது… ஏதாவ து நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற, …நானெ ன்ன சொல்ல முடியும்?” ” எதுடா நடக்காத காரியம்?” “சரிசரி. எதுக்கு இப்படிக் கோபப்படுறே?
முதல்லே ஊரை ஒண்ணுகூட்டிக் காரியத்தை ஆரம்பி. மத்தை நீயே தெரிஞ்சுக்குவே …” ”ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன்… முதமுத உங்கிட்ட வந்து கே ட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்…” கோபம் மாறாம ல் கீழே இறங்கினான் மருதன். கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடை பாதை வ ரப்பு, இருபுறமும் மூழ்க இருக்கும் பயிர்கள். ஒரு வார மழ யால் இடையிடையே பசுமை பூரித்துப்போய் நிற்கும் கருவை மரங்கள்.
மடித்துக் கட்டியிருந்த பழைய கைலி, பனியன் மீதெல்லாம் சேறடிக்க, ‘சளக் புளக்’ கென்று நடந்துகொண்டிருந்தான். வழியில் வீரன் கோவில்குளம். கரை நெடுகத் தண்ணீர்க் குளியலில் மினுக்கியபடி நிற்கும் தென்னைகள். இரவு வந்துவிட்டதாய் நினை த்து அவசரமாய்ப் பூத்துச் சிரித்தபடி குளம் முழுக்கப் பூத்திருக்கும் செவ்வல்லிகள்… இவை எதுவும் மருதனின் மனதை த் தொடவில்லை.
குளக்கரை மே ட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மா கிழவிதான் கண்ணில்பட்டாள். கிழவிக்கு எழுபது வயதிருக்கும். அதை விட ஐந்து வயதாவ து கூடுதலாக இருக்கும் கிழவனுக்கு. அவரோ நடுக்கும் சாரலில் பூவரச மரத்தின் உச்சாணிக் கொம்பில்.
மருதனின் மனத்திற்குள் ஆச்சரியம் பூத்து. கிழவன் காளியப்பன்தான் ஊரிலேயே பெரிய மிராசு. ஏராள நிலம் நீச்சு.. வீடு வாசல் ஆள் மாகானம் என்ற அமோக வாழ்க்ககை.
இதுவே இன் னொருவனாயிருந்தால் இந்நேரம் ஈசிச் சேரில் சாய்ந்தபடி வெற்றிலை குதப்பிக் கொண்டு ஊர் அக்கப்போர் பேசிக்கொண்டிருப்பான். கிழவனால் அப்படி முடியாது. “ பெரியப்பா….! ” குரல் கேட்டு, கோவண க்கட்டும், தலை யில் முண்டாசுமாய் இருந்த கிழவர் முகத்தை மறை த்த பூவரசக் கிளை களை ஒதுக்கிக் குனிந்து பார்த்ததார்.
“ யாரது…” “ நான்தான்.. மருதன்” “ என்னடா…” “ வடக்கேயிருக்கும் எட்டூருத் தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகனும். மேற் கொண்டு மழ பே யணும்கூட அவசியமில்லை….. ராத்திரிக்குள்ளெ எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா.
இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான்.” “வாஸ்தவம்தான்… அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே? என்ன பாவ ம் செஞ் சோமோ இந்த ஊர்ல வந்து பொறந்து தொலை ச்சிட் டோம். அனுபவிக்க வே ண்டியதுதான்…” “பாவ புண்ணியமெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் பெரியப்பா… முதல் காரியமா இன்னைக்கு ராத்திரி நம்ம ஊர்க்ககாரர்களை ஒண்ணு கூட்டி ஒரு வார்த்ததை சொன்னீங்கன்னா போதும்..“ கிழவரின் புருவம் ஏறி இறங்கியது.
“ என்ன்னு…?“ “ விடிஞ்சதும் வீட்டுக் கொரு ஆள் அரிவாள், மம்பட்டியோட வடிவாய்க்ககாக்கரைக்கு வந்துடணும். ஒரு செடி பூண்டு இல்லாம அரிச்சு எறிஞ்சுட்டா பொட்டுத் தண்ணியில்லாம வடிஞ்சிடும்னு சொல்லனும்..” கிழவர் மெதுவாய் மரத்திலிருந்து கீழே இறங்கினார். “ஏன்டா மருதா … உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவ து ஒண்ணு கூடியிருக்கானுவளா? மூலை க்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க." “ சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கே ப்பாங்க… அதிலும் உங்க சொல்லுக்கு மதிப்பு ஜாஸ்தி.
யோசிக்காதீங்க பெரியப்பா.. ஒருநாள் தாம திச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…” மருதனின் கவலை யும், பதை ப்பும் கிழவரை என்னவோ செய்து. இருந்தாலும் கண்மூடி யோசித்தார். “ இவன் சொல்றபடி ஊரானை க் கூப்பிட்டு ச் சொன்னாக் கே ப்பானுங்கதான்.
ஆனா நாம முன்னுக்கு நின்னு செய்றப்ப அது இதுன்னு ஆயிரம் ரெண் டா யிரம்னு செலவு வைப்பானுங்க….அப்படிச் செய்யணும்னு என்ன முடை நமக்கு. எல் லோருக்கும் ஆவறது நமக்கும் ஆயிட்டு ப் போவ ட்டுமே . இவன் வெறும்பயல்.. எது வே ணும்னாலும் சொல்லுவான்… நாம ஏமாந்துவிடக்கூடாது.
….” மனதி ன் எண்ண ஓட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தழைந்த குரலில் நெற்றியை த் தேய்த்தபடியே சொன்னார். ”ஏன்டா .. மருதா.. ஊர்லே எத்தன பயலுவ இருக்கானுவ..ஆனா உனக்கு வந்த அக்கறை எவனுக்காவது வந்துச்சா ..
நீ சொல்றபடி செஞ்சாதான் பயிர் பொழைக்கும். சந்தேகமே யில்லை. ஆனா எனக் கொரு சங்கடம்.. நாளை க்குக் காலை யிலேயே பலபலன்னு விடியறப்ப வானமா தே வியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும்.
குடும்பத்தோட வில் வண்டியிலே போறோ ம். அங்கே பேத்திக்குத் ' தலை சுத்துறா ங்க' திரும்ப வர மூணு நாளாகும். அதாம் பாக்குறேன்…” கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது. மனது கசந்து வந்து.
“ பரவாயில்லே பெரியப்பா… . நீங்க போயிட்டு வாங்க.” திரும்பிப் பார்க்ககாமல் நடக்கத் தொடங்கினான். ஊர் எல்லையை மிதித்தபோது எதிரில் வந்து கொண்டிருந்த பிரே ம்குமாரை ப் பார்த்தும் சரேலெ ன்று உற்சாகம் கொப்பளித்து மருதனுக்கு. ‘ நாம நினை க்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன்.‘ முகம் மலர பிரேம்குமாரை வ ழிமறித்தான்.
“என்னண்ணே..” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி, பிரேமிடமிருந்து சட்டென்று எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நே ர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.
"மருதண்ணே … நானே கூட நாளை க்கு என்ஜினியரைப் பார்க்கலாம். ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு நாளை க்கு மூச்சுவிட முடியாத வேலை . எங்க தலைவ ருக்குப் பிறந்தநாளு. அதுக்கு அன்னதானம்.
. ரத்தானம்னு நிறைய வேலை . பிறந்தநாள் விழா முடிஞ்சதும் நீங்க சொல்ற மாதிரி ஏதாவ து செய்வோ ம். வரட்டுமாண்ணே..
எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க." மருதனின் பதிலை எதிர்பார்க்ககாமல் அவன் போய்க்கொண்டே இருந்தான். இதற்குப் பிறகும் மருதனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் ஊர்க்ககாரர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள்.
ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்து. அதுவும் தள்ளிப் போட முடியாத அவசர வேலை . மனமும் உடம்பும் சோர்ந்துபோய் வீடு திரும்பிய மருதனை அல்லி பதட்டமாய் எதிர்கொண்டாள்.
கன்னத்தில் கைவ த்தபடி உட்கார்ந்துவிட்டான் மருதன். அவனை ப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. ” ஏன் மாமா . .
தெரியாம த்தான் கே க்குறே ன்… நீ நட்டுப் போட்டுருக்கிற எந்த நிலம் பாழாப் போயிடப் போவுதுன்னு இப்படிக் கன்னத்திலே கை வ ச்சுக்கிட்டு உக்காந்துகிட்டே… இந்த ஊர்ல இருக்கிற மொத்தம் அறுபது வே லி நிலத்திலே நமக்குன்னு ஒரு சக்கரைக்குழி நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப் போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட இருக்கிறது நம்ம கை யும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா.. இன்னொரு ஊரு..
வேலையை ப் பாப்பியா… ” ஆவே சமா ய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள். விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்த மருதனின் முன்னே சோற்றுத்தட்டையும் தண்ணீரையும் வைத்தாள். யந்திரமாய்ச் சாப்பிட்டான்; ஊமை யாய்ப் படுத்துவிட்டான். இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை.
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நெல் பயிர் அத்தனையும் “என்னைக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று அவனை ப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தன. பொழுது புலரும் தருணம். புருஷனை த் தொடக் கை நீட்டியவள் அவன் இல்லாமல் திடுக்கிட்டு எழுந்தாள். ‘எங்கே போனாரு…?‘ யோசித்தவளுக்கு, ‘ஒரு வேளை அங்கே போயிருப்பாரோ‘ என்று பொறிதட்டியது.
அல்லியின் கணக்குத் தப்பவில்லை. தளும்புகின்ற வடிவாய்க்ககாலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடிகளை ச் ‘ சரக் சரக்‘ கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளை யறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக் கொண்டு வாய்க்ககாலுக்குள் இறங்கிவிட்டாள்.
“ நீ சொல்றது நிஜம்தான் மாமா . ஊரு நல்லா இருந்தாதான் நாம ளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்ககாலை நீயும் நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா?“ ஆற்றாமை யுடன் கேட்டவளைத் திரும்பிப் பார்க்ககாமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோ ம்…!“ அதற்கு மே ல் என்ன சொல்வது என்று தெரியாம ல் அவன் அறுத்துப் போட்ட செடிகளை அள்ளிக் கரையில் கொண்டுபோய்ப் போடத் தொடங்கினாள்.
அவர்களைப் பார்த்தபடியே சற்றுத்தள்ளி எப் போதும் போல் வலைபோ ட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு என்ன தோன்றியதோ என்னவோ… வலையை மடக்கிக் கரையில் போட்டான். “ நாசமாப் போற செ டிங்க, தரைகளிலே யும் மண்டுது, தண்ணியிலே யும் மண்டுது. .. எங்கிருந்து வந்துச் சோ எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க.
..” என்று முணுமுணுத்தபடி வே ட்டியை அவிழ்த்து முண்டாசு கட்டியபடி வாய்க்ககாலுக்குள் இறங்கிவிட்டான், மருதனுக்கு ஜோடியாக. நேற்று மருதனிடம் சொல்லிவிட்டதாலோ என்னவோ வடிவாய்க்ககால் ரோட்டில் வில் வண்டியின் பின்புறம் உட்கார்ந்தபடி மகள் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கிழவர் காளியப்பனின் பார்வை யதே ச்சையாக வாய்க்ககாலுக்குள் சென்றபோது திடுக்கிட்டுப் போனார். மருதன்… . அல்லி… .
மா ரி… மூவரும் மும்முரமா ய்ச் செடிகளை அறுத்தபடியிருந்தனர். அனிச்சையாய் வண்டியிலிருந்து குதித்துவிட்டார் பெரியவர். நொடி நே ர யோசனை க்குப் பிறகு “ வண்டியை வீட்டுக்குத் திருப்பிப் போடா.. எனக்கு இங்கே கொஞ்சம் வேலை யிருக்கு..” என்றபடி வே ட்டி சட்டையைக் கரை யில் அவிழ்த்துப் போட்டுவிட்டு, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரும் வாய்க்ககாலுக்குள் இறங்கிவிட்டார்.
இந்தச் செய்தி வண்டிக்காரன் மூலம் ஊருக்குள் பரவியது. டீக்கடை, மா ரியம்மன் கோவிலடி என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் காதில் விழுந்து. உறுத்தல் தாங்காமல் ஊர்க்ககார்கள் ஒவ்வொருத்தராய்த் தயங்கித் தயங்கி முன்னும் பின்னுமாய் வடிவாய்க்ககால் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். உத்தம சோழன் (செல்வராஜ்) எழுதிய ’முதல்கல்’ கதை பாடமாக உள்ளது.
தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது. உத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்; மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் தொலைதூர வெ ளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்; ’கிழக்கு வாசல் உதயம்’ என்ற திங்களிதழை நடத்தி வருகிறார். நூல்வெளி உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வழங்கும் நோFோக்கங்களையும் அதனை வளர்ப்பதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.
கற்பவை கற்றபின்... இயல் குழந்தை, கதிரவன் போன்றவை இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள். இப்பெயர்கள் எழுவாயாக அமை யும்போது அவற்றின் வினை முடிபு இருதிணை பெற்றும் வருகின்றது. குழந்தை சிரித்தான் - குழந்தை சிரித்து கதிரவன் உதித்தான் - கதிரவன் உதித்து பேச்சு வழக்கில், அஃறிணை முடிபைப் பெற்று வருவதே பெருவழக்காக உள்ளது.
பால் பாகுபாடு தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமை ந்துள்ளது. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்ககை இடத்தில் வரும். பயனிலை விகுதிகளான ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியவை பால்பகுப்பைக் காட்டுகின்றன. பழந்தமிழில் ஐம்பால்களுள் பலர்பால் சொல், பன்மையிலும் உயர்வு கருதிச் சிலவேளை களில் ஒருமை யிலும் வந்துள்ளன.
மாண வர் வந்தனர் (பன்மை) - ஆசிரியர் வந்தார் (ஒருமை ) இக்காலத் தமிழில் பலர்பாலை உணர்த்தும் சொல், பன்மைப் பொருளை உணர்த்ததாமல் ஒருமை ப் பொருளை ம ட்டுமே உணர்த்துகிறது. பன்மைப் பொருள் உணர்த்துவதற்கு, ’கள்’ என்னும் விகுதி உதவுகிறது. அவர் வந்தார். (ஒருமை ) அவர்கள் வந்தார்கள்.
(பன்மை) தமிழில் உயர்திணையில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உரிய பொதுப்பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் தொடர்களில் அமை யும்போது வினை முற்றைப் பொறுத்தே பால் அறியப்படுகிறது. தங்கமணி பாடினான் - தங்கமணி பாடினாள் பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துகின்றன. ஆண் - பெண்; அப்பா-அம்மா; தம்பி-தங்கை; தந்தை-தாய் அஃறிணை எழுவாயில் ஆண் பெண் பகுப்புமுறை ம ரபில் இருந்தாலும் வினை முற்றில் அவற்றை வே றுபடுத்தும் பால்காட்டும் விகுதிகள் இல்லை.
எனவே ஒருமை , பன்மை அடிப்படையிலேயே ஒன்றன்பால், பலவின்பால் என்பன அறியப்படுகின்றன. காளை உழுதது. பசு பால் தந்து. ஆகிய தொடர்களில் காளை ஆண்பாலாகவும் பசு பெண்பாலாகவும் உள்ளன.
ஆனால், வினை முற்று பால்பாகுபாட்டிற்குரிய விகுதிகளை ப் பெறாம ல் ஒன்றன்பால் விகுதி பெற்று முடிந்துள்ளது. தற்காலத்தில், அஃறிணை எழுவாய் மாற்றம் அடை ந்துள்ளது. மாட்டினத்தில் பெண்பாலை க் குறிக்க பசுமாடு எனவும் ஆண்பாலை க் குறிக்க காளைமா டு (எருது) எனவும் சொற்கள் வழங்கப்படுகின்றன. பிற விலங்குகளை க் குறிக்கையில் ஆண்குரங்கு, பெண்குரங்கு எனவும் எழுவாய்ப் பொதுப்பெயருடன் ஆண், பெண் என்னும் பால்பாகுபாட்டுப் பெயர்கள் முன்சேர்த்து வழங்கப்படுகின்றன.
எண் பாகுபாடு இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன. இரண்டு மனிதர்கள் அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை. பத்துத் தேங்காய் இவற்றைப் பத்துத் தே ங்காய்கள் என்று எழுதுவதில்லை. இக்காலத் தமிழில் அஃறிணைப் பன்மைக்கெனத் தனி வினை முற்றுகள் இல்லை.
ஆனால், ஒருமை , பன்மை வே றுபாடு எழுவாயிலேயே வெ ளிப்படுகிறது. ஒரு மரம் வீழ்ந்து பத்து மரம் வீழ்ந்து தற்காலத் தமிழில் பே ச்சிலும் எழுத்திலும் காண ப்படுகிற ஒருமை – பன்மை பற்றிய குழப்பங்களுள் ஒன்று ‘ஒவ்வொரு’ என்னும் சொல்லைப் பற்றியதாகும். ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது. போன்ற தொடர்களைப் பேசவும் எழுதவும் காண்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் சுற்றுச் ழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. என்றே பே சவும் எழுதவும் வே ண்டும். (ஒவ்வொரு – ஒருமை ) இடப்பாகுபாடு இடம் தன்மை, முன்னிலை , படர்க்ககை என மூவகை ப்படும்.
பெயர்ச்சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது. அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிப் பெயர்களிலும் வினை முற்றுகளிலுமே வெ ளிப்படும். பே சுபவன், முன்னிருந்து கே ட்பவன், பே சப்படுபவன் அல்லது பே சப்படும் பொருள் ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை , படர்க்ககை என அழைக்கப்படும். தமிழில் தன்மையிலோ முன்னிலை யிலோ ஒருமை , பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.
சான்றாக, நான் புத்தகம் கொடுத்தேன் என்னும் தொடரில் பேசியவர் ஒருவர் என்று கூற முடியுமே ஒழிய ஆணா? பெண்ணா? என்று கூற முடியாது. முன்னிலை யிலும் இவ்வாறே பால் பாகுபாட்டை அறிய முடியாது.
தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இருவகை உண்டு. பேசுபவர் (தன்மை) முன்னிலை யாரையும் தன்னுடன் சே ர்த்துக் கொண்டு பே சுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும். நாம் முயற்சி செய்வோம் (உளப்பாட்டுத் தன்மைப் பன்மை) இத் தொடரில் நாம் என்பது தன்மை முன்னிலை யில் உள்ள அனைவரை யும் குறிக்கிறது. பே சுபவர் முன்னிலை யாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.
நாங்கள் முயற்சி செய் வோம் (உளப்படுத்தாத் தன்மைப் பன்மை) நாம் தமிழ்மொ ழியை ப் பல்வேறு நிலை யில் பல்வேறு நோக்கில் பயன்படுத்துகிறோம். பழையனவற்றைத் தவிர்ப்பதற்கும் புதியனவற்றை ஏற்பதற்கும் நாம் தயங்கியதே இல்லை. கால ஓட்டத்தில் இலக்கணங்களும் இலக்கணக் கூறுகளும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்கின்றன. இலக்கணத் தேர்ச்சிகொ>ொள் ) தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு ) “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் அ) நன்னூல் ஆ) அகத்தியம் இ) தொல்காப்பியம் ஈ) இலக்கண விளக்கம் ) யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலை யாய் அமை ந்து, உணர்த்தும் திணைகள் முறையே அ) அஃறிணை, உயர்திணை ஆ) உயர்திணை, அஃறிணை இ) விரவுத்திணை, அஃறிணை ஈ) விரவுத்திணை, உயர்திணை ) பொருத்தி விடை தேர்க. அ) அவன், அவள், அவர் - ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை ஆ) நாங்கள் முயற்சி செய்வோ ம் - ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை இ) நாம் முயற்சி செய்வோ ம் - ) தன்மைப் பன்மைப் பெயர்கள் ஈ) நாங்கள், நாம் - ) பதிலிப் பெயர்கள் அ) , , , ஆ) , , , இ) , , , ஈ) , , , ) மொழியின் சொற்றொடர் அமை ப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
) உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமா று இரண்டு தொடர்களை எழுதுக. கற்பவை கற்றபின்... திணைப்பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதற்குப் பாடப்பகுதியிலிருந்து சான்று காட்டுக. தெரியுமா?
ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் தொடர் அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். பலவுள் தெரிக. .
பொருத்துக. அ) குரங்குகள் - ) கன்றுகளை த் தவிர்த்தன ஆ) விலங்குகள் - ) மரங்களிலிருந்து வீழ்ந்தன இ) பறவ கள் - ) குளிரால் நடுங்கின ஈ) பசுக்கள் - ) மே ய்ச்சலை மறந்தன அ) , , , ஆ) , , , இ) , , , ஈ) , , , . ”நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது- அ) ரிய ஒளிக்கதிர் ஆ) மழ மே கங்கள் இ) மழ த்துளிகள் ஈ) நீர்நிலை கள் . சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் – காரணம் அ) நேரடி, மறைமுக வேலைவா ய்ப்புகளின் களம் ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை ஈ) அ, ஆ, இ- அனை த்தும் .
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென – அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க. அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர் இ) இடைச்சொல் தொடர் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தாகவே இருந்து.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி இ) கூற்று தவறு, காரணம் தவறு ஈ) கூற்று சரி, காரணம் சரி குறுவினா . கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக. . இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
. இந்தோ - சாரசனிக் கட்டக்கலை - குறிப்பு வரைக. . ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
சிறுவினா . ”நீர்நிலை களிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” - இக்கவிதையின் அடி, ”தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ” - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை ப் பற்றி எழுதுக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →