இயல் XII Std Tamil XII Std Tamil - - - - மணந்தகம் மணம்புரிந்து கணவனும் மனைவியும் சே ர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட க்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ (Family of procreation) எனப்படுகிறது. முதல் குழந்ததை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்ததை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெ றிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று தொல்ககாப்பியம் (தொல்.
பொருள். ) கூறுகின்றது. இதன் மூலம் மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மமை பெற்றிருந்ததை அறிய முடிகிறது. தாய்வழிக் குடும்பம் சங்ககாலத்தில் கண ( குழு) சமூகத்துக்குத் தாயே தலை மை ஏற்றிருந்ததாள்.
தா ய்வழியாகவே குலத்த டர்ச்சி குறிப்பிடப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்ககாட்டடாகும். செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். ) வானரைக் கூந்தல் முதியோJோள் சிறுவன் (புறம்.
) என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (கலி. பாலை. ) முதலான தொடர்களில் ‘ இவள் மகன்’ என்றறே கூறப்பட்டது. ’இவன் மகன்’ எனக் கூறப்படவில்லலை என்பது நோக்கத்தக்கது.
இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன. சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்ககை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது (அகம் , : , : ). தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்குக் காரணமானவர்களாக இருப்பதா ல் பெ ண்குழந்ததைகளின் பே று முதன்மமையாக விரும்பப்பட்டது.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொ@ த்தும் வளங்களும் செல்வங்களும் பெ ண்களுக்குச் செ ன்று சேர்ந்தன . தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்ககே போய்ச் சேர்ந்தன என்பதை மருதத்திணைப் பாட ல் ஒன்று (குறுந். ) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. தந்ததைவழிக் குடும்பம் மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது, தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின்வழி அறிய முடிந்ததாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறையும் கூடவே வலுவாக வே ர் ஊன்றிப் பரவலாகிவிட்டதையும் காணமுடிகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெ ண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்ததையகத்தில் (patrilocal) வாழவே ண்டும். மணமான பின் தலை வன், தலை வியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செ ய்திருக்கிறாள் என்னும் செய்தி, ஐங்குறு நூற்றில் ( : - ) காணப்படுகிறது. இதன்வழி மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் (வீடு) என்பதை உறுதிப்படுத்தலாம். மே லும், “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” (குறுந்.
) என்னும் குறுந்தொகைப் பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது. சங்ககாலத்தில் தந்ததைவழிக் குடும்பமுறை மிகவும் வலுவான, ஒரு பரவலான முறையாக இருந்துள்ளது. இதன ப் பொருள்வயிற் பிரிவு, போ ர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் எனப் பல்வவேறு சமூகக் களங்களில் காண இயலும். தனிக்குடும்பம் தனிக்குடும்பம் (Nuclear family) தோன்றுவதற்ககான தொடக்கநிலை பற்றிச் சங்க XII Std Tamil XII Std Tamil - - - - இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன.