📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 61grammar_exercise

சுற்றத்ததார் கண்ணணே உள

Chapter 3: 2 · TAMIL

சுற்றத்ததார் கண்ணணே உள பண்பபாடு பழங்குடியினரின் சமூக வாழ்க்ககை ஓவியம், நீலகிரி. XII Std Tamil XII Std Tamil - - - - குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்ததே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது; குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. ஆதலின், குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்ககாலம் முழுவதும் தொடர்ந்து வே று எந்த அமைப்பும் இந்த அளவுக்கு மனிதன ச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லலை.

குடும்பம் குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்ததான் ( ) பயின்று வருகிறது. சங்க இலக்கியத்தில் ‘குடம்பபை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போ டு தொடர்புடையவை. ‘குடும்பு’ எனும் சொல் ’கூடி வாழுதல்’ என்று பொருள்படுகின்றது. குடும்பு எனும் சொல்லுடன் ‘அம்’ விகுதி சேர்த்துப் பொருண்மமை விரிவாக்கமாக (Semantic extension) ’குடும்பம்’ எனும் சொல் அமைந்தது.

பண்டடைத் தமிழர்கள், குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தொல்ககாப்பியப் பொருளியல் நூற்பபா ( ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடுகின்றது. வாழிடம் சங்க இலக்கியத்தில் வாழ்விடங்கள் பற்றி மே லும் பல சொற்கள் உள்ளன. இல், மனை, குரம்பபை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வே றுபா டுகளைச் சுட்டுகின்றன.

மருதத்திணைப் பாட ல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ (அகம். : - ) என மனைவியின் இல்லத்ததையும் கணவனின் இல்லத்ததையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காணமுடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்ககாலிகத் தங்குமிடம், ‘புக்கில்’ (புறம் - ) எனவும் திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற் றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம், ‘தன்மனை’ (neolocal) எனவும் வழங்கப்பபெற்றுள்ளன. ‘ மனை’ எனும் சொ@ ல் ‘ நம்மனை’ , ‘ தம்மனை’ , ‘ எம்மனை’ , ‘ இம்மனை’ , ‘உம்மனை’, ‘நின்மனை’, ‘நுந்ததைமனை’, ‘நன்மனை’, ‘வறுமனை’, ‘வளமனை’, ‘ கடிமனை’ , ‘ தாய்மனை’ எனச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது.

‘மனையோள்’ எனும் சொ@ொல்லும் சங்கப்பபாடல்களில் பயின்றுவரும் சொ@ொல்லலாகும். இதன்மூலம் மனை என்பது வாழிடத்ததைக் குறிக்கும் முதன்மமைச் சொ@ொல்லலாக உள்ளதை அறியலாம். குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட நெடுங்ககாலம் ஆகியிருக்கலாம். இந்த உயர்ந்த அமைப்பின் மூலமே உலகச்சமூகம் இயங்குகிறது.

சங்க காலத்தில் குடும்ப அமைப்பு மேலோங்கிய ஒன்றறாக இருந்தது. அதன் தொடர்ச்சி இன்றுவரை இருக்கிறது. தொன்மமைக் காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பபை உருவாக்கியிருந்த தமிழ்ப் பண்பபாட்டின் செழுமை, சங்க இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுகிறது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →