Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 50question

செய்திகளை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about செய்திகளை?

செய்திகளை ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. பூக்களை ப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர். மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலா நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர். அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை.

📖 10th Tamil Textbook · Page 50

Read from the source

Complete lesson

செய்திகளை ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. பூக்களை ப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர். மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலா நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை.

கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

- கோவை.இளஞ்சேரன் மலரில் சில எளியவை ஆகக் காரணங்கள் யாவை? . அரும்பாகி மொட்டாகிப் பூவாகி… என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக. .

பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடர்களை நான்கினை எடுத்தெழுதுக. வாழ்த்துமடல் எழுதுக. மாவட்ட அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →
    செய்திகளை — Tamil, SSLC - English Medium | Examozhi