Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 175poem

ஊர்தி ஓட்டுநருக்கான நெFறிகள்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

ஊர்தி ஓட்டுநருக்கான நெFறிகள் • சாலைகளில் இடப்பக்கம் வண்டிகள் செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்! அதுதான் முதல் விதி. • சாலையின் ஓரங்களில் இருக்கும் அடையாளப் பலகை களைப் புரிந்து ஊர்திகளை இயக்கவேண்டும். • மகிழுந்தில் செல்பவர்கள் கட்டாயம் இருக்கைப்பட்டை அணியவேண்டும். அதுவே உயிர்ப் பாதுகாப்பு! • காதுகளை அடைத்தவாறு காதணி பேசிகளை அணிந்துகொண்டு பாடல் கேட்கவேண்டுமானால் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லுங்கள் – ஊர்தியை இயக்கியவாறு அல்ல! • சாலையில் இடப்பக்கம் திரும்ப, முடிந்த அளவு இடப்பக்கம் வந்த பிறகு, வண்டியின் இடப்புறச் சைகைவிளக்கை ஒளிரவிட்டவாறு, கண்ணாடியில் கண்காணித்துக்கொண்டே இடப்பக்கமாகத் திரும்பவேண்டும். • அதேபோல வலப்பக்கமாகத் திரும்புவதற்கு, முதலில் அதிக கவனத்துடன் சாலையின் நடுவில் வரவேண்டும். பிறகு எச்சரிக்கையுடன் வலப்புறச் சைகைவிளக்கை ஒளிரவிட்டவாறு கண்ணாடியில் கண்காணித்துக்கொண்டே திரும்ப வேண்டும். • சிலர் பந்தயங்களில் ஓட்டுவதைப்போலச் சாலையில் செல்லும் வண்டிகளை இடமாகவும் வலமாகவும் கடந்து, பின்னால் வருபவர்களுக்குக் கடும் அச்சத்தைக் கிளப்பியவாறு ஓட்டுவார்கள்! அதைப் பார்த்து நாமும் கிளர்ச்சி அடைந்து வேகமாக ஓட்ட முயலக்கூடாது. மித வேPகம் - மிகுந்த பாதுகாப்பு! • சாலையை ப் பயன்படுத்தும் அனை வரும் தீயணைப்பு ஊர்திக்கும் பிணியாளர் ஊர்திக்கும் முன்னுரிமை தந்து வழிவிடவே ண்டும். • சாலை யில் இருபுறமும் நடந்துவருபவர்கள் அவர்களுக்குரிய சாலையை க் கடக்கும் இடங்களில் கடப்பதற்கு வழிவிடவே ண்டும். • ஊர்திகளை அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவாறு நிறுத்தவேண்டும். • சிவப்பு விளக்கைக் கண்டவுடன் சாலையில் நிறுத்தக்கோட்டுக்கு முன்பாக ஊர்தியை நிறுத்தவேண்டும். ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கையில் கட்டாயம் வைத்திருக்க வே ண்டியவை : • ஓட்டுநர் உரிமம் • ஊர்தியின் பதிவுச் சான்றிதழ் • ஊர்திக்குச் செலுத்திய வரிச் சான்றிதழ் • ஊர்திக் காப்பீட்டுச் சான்றிதழ் • மகிழுந்து, சரக்குந்து போன்ற வண்டிகள், அப்பகுதிகளில் ஓட்டுவதற்கான இசைவுச் சான்றிதழ் • நமக்கும் சாலையில் பயணிக்கும் பிறருக்கும் விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பாக ஊர்திகளை இயக்கவேண்டும். • விபத்துகளை க் கண்ணுற்றால் முதலுதவி, பிணியாளர் ஊர்தியை அழைத்தல் போன்ற நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்யவே ண்டும் அடுத்தவரின் வலியை யும் வே தனையை யும் திறன்பேசியில் படமெ டுத்து சமூக வலை த்தளங்களில் போடுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களைக் கட்டாயமாகத் தவிர்க்கவேண்டும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →