generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 203grammar_exercise

1. அறநெறி அணுகுமுறை (Moralisticism)

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 1. அறநெறி அணுகுமுறை (Moralisticism)?

. அறநெறி அணுகுமுறை (Moralisticism) மனித சமூகத்தில் தEொன்றுதEொட்டு மரபுவழியாக வந்தவை அறங்கள். இவற்றை மையமாகக்கொண்டு, இலக்கியங்களை அணுகுவது, அறநெறி அணுகுமுறை. தமிழ் இலக்கிய வரலாற்றில், பெரும்பால ன நூல்கள் அறம் உரைப்பனவாக உள்ளன. “அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே“என்று இலக்கணம் கூறுகிறது. “தன்னெஞ்சறிவது பொய்ய ற்க“, “மனத்துக்கண் மாசிலன் ஆதல்“ எனத் திருக்குறள் சமயஞ்சாரா அறத்தைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் மூன்று உண்மைகள் உணர்த்தப்படுகின்றன. அவை, அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன. இவை மூன்றும் சிலம்பின் மையக்கருத்துகள். இந்நூலின் நிகழ்ச்சிப் புனைவுகள் யாவும் இம் மையக்கருத்துகளைச் சுற்றியே அமைகின்றன.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 203

Read from the source

Complete lesson

. அறநெறி அணுகுமுறை (Moralisticism) மனித சமூகத்தில் தEொன்றுதEொட்டு மரபுவழியாக வந்தவை அறங்கள். இவற்றை மையமாகக்கொண்டு, இலக்கியங்களை அணுகுவது, அறநெறி அணுகுமுறை. தமிழ் இலக்கிய வரலாற்றில், பெரும்பால ன நூல்கள் அறம் உரைப்பனவாக உள்ளன.

“அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே“என்று இலக்கணம் கூறுகிறது. “தன்னெஞ்சறிவது பொய்ய ற்க“, “மனத்துக்கண் மாசிலன் ஆதல்“ எனத் திருக்குறள் சமயஞ்சாரா அறத்தைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் மூன்று உண்மைகள் உணர்த்தப்படுகின்றன. அவை, அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன.

இவை மூன்றும் சிலம்பின் மையக்கருத்துகள். இந்நூலின் நிகழ்ச்சிப் புனைவுகள் யாவும் இம் மையக்கருத்துகளைச் சுற்றியே அமைகின்றன. மனித சமுதாயத்தில் இவை மதிப்பு வாய்ந்த அறங்களாக உள்ளன. இத்தகைய அறக்கோட்பாடுகள், இலக்கியங்களை அளவிட உதவுகின்றன.

ஆகவே அறவியல் அணுகுமுறை, இலக்கியத்தில் வெளிப்படும் ஒழுக்கமுறையை ஆராய்வதEோடு, இலக்கியத்தைத் தரம் பிரித்தும் கூறுகிறது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →