அறிவோம் தெளிவோம்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அறிவோம் தெளிவோம்?
அறிவோம் தெளிவோம் தேசிய சங்கீத நாடக அகாதெமி நடத்திய போட்டியில் மு. இராமசுவாமி, துர்க்கிர அவலம் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் பெங்களூரில் நடந்த தென் மண்டல நாடக விழாவிலும், டெல்லியில் நடந்த தேசிய விழாவிலும் இதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் இந்திய அரங்கில் தமிழ் நாடகத்திற்கு ஓர் அடையாளம் கிடைத்தது. தென் மண்டல நாடக விழாவில் நிஜநாடக இயக்க நாடகமான ’சாபம்! விமோசனம்!’ அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் முதல் நாடக விழாவை நிஜநாடக இயக்கம் 1988ஆம் ஆண்டு நடத்தியது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1991ஆம் ஆண்டு நடந்த பாதல் சர்க்கார் நாடக விழா குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அறிவோம் தெளிவோம் இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 138
Read from the source
Complete lesson
அறிவோம் தெளிவோம் தேசிய சங்கீத நாடக அகாதெமி நடத்திய போட்டியில் மு. இராமசுவாமி, துர்க்கிர அவலம் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் பெங்களூரில் நடந்த தென் மண்டல நாடக விழாவிலும், டெல்லியில் நடந்த தேசிய விழாவிலும் இதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் இந்திய அரங்கில் தமிழ் நாடகத்திற்கு ஓர் அடையாளம் கிடைத்தது.
தென் மண்டல நாடக விழாவில் நிஜநாடக இயக்க நாடகமான ’சாபம்! விமோசனம்!’ அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் முதல் நாடக விழாவை நிஜநாடக இயக்கம் 1988ஆம் ஆண்டு நடத்தியது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1991ஆம் ஆண்டு நடந்த பாதல் சர்க்கார் நாடக விழா குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
அறிவோம் தெளிவோம் இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே. இந்தியமொழிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், இரவீந்திர நாத் தாகூர். இருவரும் வங்கமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களாவர். தாகூரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சத்தியஜித் ரே, அவரது பண்பட்ட சிந்தனைத் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தாகூரின் எழுத்துப் படைப்புகளை நேரில் கண்டு, கேட்டறியும் உயிர் செறிந்த கலையனுபவங்களாக, உலகமெல்லாம் இரசித்து மகிழும் வகையில் உருவாக்கிய பெருமை, சத்தியஜித் ரேவையே சாரும். தாகூரின் ‘சாருலதா‘, ‘வீடும் உலகமும்‘ (கரே பைரே) என்னும் இருநாவல்கள், சத்யஜித் ரேவால் உருவாக்கப்பட்ட அரிய திரைப்படக் கலை வடிவங்கள். 1961ஆம் ஆண்டில், தாகூரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இரவீந்திர நாத் தாகூர் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார். கலை இலக்கிய சிந்தனாவாதி ஒருவர் பற்றிய படம் என்றால், அஃது இப்படித்தானே இருக்கவேண்டும் என்று கூறத்தக்க அளவில், அருமையான படைப்பாக, அந்த ஆவணப்படம் இன்றளவும் விளங்குகிறது.
பேராசிரியர்: ஆமாம். ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்‘ என்ற சிறுகதையைச் சசி ‘பூ‘ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். இக்கதை எளிமையான பெண்ணின் பேரன்பைப் பேசுகிறது. அகிலன் : மகேந்திரன் ‘முள்ளும் மலரும்‘ கதையில் சில மாற்றங்களைச் செய்ததாகச் சொன்னீர்கள்.
அப்படியென்றால் ஒரு நாவல் அல்லது சிறுகதை எந்த முறையில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது? பேர சிரியர்: ஒரு நாவலைத் திரைப்படமாக்கும் முறையை இருவகையாக பிரிக்கலாம். முதலாவது, வாக்கியத்திற்கு வாக்கியம் மூலப்படைப்பைச் சார்ந்தே திரைப்படக்காட்சிகளை அமைப்பது. இரண்டாவது முறை திரைப்படத்தின் சாத்தியக்கூறுகளை, பலத்தை உணர்ந்து சினிமா மொழியில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவது.
நாவலாசிரியரின் மையக்கருத்தை உள்வாங்கி அதற்கேற்றபடி திரைக்கதையை அமைத்து அக்கருத்தைத் திரைப்படக் காட்சிகள் மூலம் வெளிக்கொணர்வது. முகிலன்: புரிகிறது ஐயா! சமீபத்தில் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களாக எவற்றைச் சொல்லலாம்? பேராசிரியர்: கி.ராஜநாராயணனின் கிடை (ஒருத்தி), ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்‘ (நான் கடவுள்), பாஸ்கர் சக்தியின் ‘அழகர்சாமியின் குதிரை‘ (அழகர்சாமியின் குதிரை), பி.எச்.
டேனியலின் எரியும் பனிக்காடு (பரதேசி), மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்‘ (விசாரணை), தமயந்தியின் தடயம் (தடயம்) ஆகியன திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. பரதேசி திரைப்படக் காட்சி வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ திரைப்படம் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புதினத்தின் ஒரு பகுதியே. ‘நோட்டா‘ படம் ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்‘ நூலை அடிப்படையாகக் கொண்டதுதான். இதுபோன்றே அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் அவை சிறந்த கலைப்படைப்பாக மாறுவது இயக்குநரின் ரசனையையும் மக்களின் ரசனையையும் பொருத்ததே. அறிவோம் தெளிவோம் பெரிய காண்டியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களின் முன்பு நிகழ்த்தப்படுகின்றது. தற்போ து இக்கதைப்பாடல் சின்னண்ணன் பெரியண்ணன் நாடகம், வளநாடு நாடகம், பொன்ன ர் சங்கர் படுகளம் என்ற பெயர்களில் நிகழ்த்தப்படுகின்றது. ஆண்டுதEோறும் தை மாதம் முதல் ஆடி மாதம் வரையில் ஊர்தோறும் நடைபெறும் திருவிழாக்களின்போது நிகழ்த்தப்படுகின்றது.
இதில் உடுக்கு, பறை , கொம்பு, சங்கு, சேகண்டி போன ற இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இக்கதைப்பாடல் நிகழ்வில் முதன்மைக் கதாபாத்திரங்களாகவும் துணைக்கதாபாத்திரங்களாகவும் ஏழுபேர் முதல் ஒன்பது பேர் வரை நடிக்கின்றனர். ஒயிலாட்டம், கும்மி, தாலாட்டு, ஒப்பாரி, தெம்மாங்கு, காவடியாட்டம் போன ற கலைகள் தேவைக்கேற்ப இவற்றில் இணைக்கப்படுவதும் உண்டு. .
பாடல்சார் கலைகள் நிகழ்த்துகலைகளுள் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து அரங்கேற்றப்படும் கலைகளைப் பாடல்சார் கலைகள் என்பர். பாடலுக்கேற்ற நடன அசைவுகளுடன் கூடியவை இக்கலைகள். இலாவணி, உடுக்கைப்பாட்டு, பகல்வேடம், ராஜாராணி ஆட்டம் போன றவை பாடலோடு இணைந்து நிகழ்த்தப்படுகின்ற பாடல்சார் கலைகளாகும். அறிவோம் தெளிவோம் இரண்டாம் வேற்றுமைமுதல் ஏழாம் வேற்றுமைவரை உள்ள உருபுகள் முறையே ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன.
இவை, பின்னொட்டுகளாக வருவதனை அறிந்துள்ளீர்கள். இவை மட்டுமின்றி, வேறு சில உருபுகளும் உள்ளன. இவற்றை வேற்றுமைச்சொல் பின்னொட்டு அல்லது பின்னுருபு (Postpositions) என்கிறோம். இலக்கணநூலார், சொல்லுருபுகள் என்று கூறுகின்றனர்.
பின்னுருபுகள் அல்லது சொல்லுருபுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: பின்னொட்டாக வரும் வேற்றுமை உருபுகள் ஐ மரத்தை கு - மரத்துக்கு அது - மரத்தினது ஆல் - மரத்தால் இன் - மரத்தின் கண் - மரத்தின்கண் அறிவோம் தெளிவோம் வினைமுற்று எழுவாய் திணை பால் எண் இடம் காலம் விளையாடுவான் அவன் உயர்திணை ஆண்பால் ஒருமை படர்க்கை எதிர்காலம் பாடுகின்றேன் நான் உயர்திணை ஒருமை தன்மை நிகழ்காலம் பேசினார்கள் அவர்கள் உயர்திணை பலர்பால் பன்மை படர்க்கை இறந்தகாலம் வந்தது அது அஃறிணை ஒன்றன்பால் ஒருமை படர்க்கை இறந்தகாலம் கொடுப்பாய் நீ உயர்திணை ஒருமை முன்னிலை எதிர்காலம் மேய்கின்றன அவை அஃறிணை பலவின்பால் பன்மை படர்க்கை நிகழ்காலம் செய்வீர்கள் நீங்கள் உயர்திணை பலர்பால் பன்மை முன்னிலை எதிர்காலம் gave past tense speaks Present tense ஆகவேதான், தமிழ் முதலான திராவிட மொழிகளில் ‘தEோன்றா எழுவாயும்‘, ஆங்கிலம் முதலான இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் தEொடரமைப்பில் ‘பதிலி எழுவாய் இடுதல்‘ என்ற பண்பும் காணப்படுகின்றன. தமிழில் வினைச்சொற்கள் இல்லாமலும் தEொடர்கள் அமைகின்றன. இத்தகைய தEொடர்களில் பெயர்கள் பயனிலையாக வருவதுண்டு. இவை போன ற தEொடர்களுக்கு இணையாக ஆங்கில மொழியில் is, are போன ற இணைப்பு வினைகள் சேர்க்கப்படுகின்றன.
எ.கா. அவன் இராமன் - He is Raman அறிவோம் தெளிவோம் கோட்டை விடுதல்: மன்னர் ஆட்சிக்காலத்தில் அரசர்களிடையே நடக்கும் போர்களில் பெருந்தோல்வி என்பது, தாங்கள் குடியிருக்கும் கோட்டையினை இழப்பதே ஆகும். இதனைத்தான் கோட்டை விடுதல் என்றனர். இன்று, அச்சொல்லினைப் பெருந்தோல்விக்குரியதாகப் பயன்படுத்துகிறோம்.
அறிவோம் தெளிவோம் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூன்றையும் இலக்கண எல்லையில் அவை பொருந்தாவிட்டாலும் அவற்றின் பயன்கருதி, வழக்கிலுள்ள சொற்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நன்னூல் குறிப்பிடுகிறது. இம்மூன்றனுள் ‘மங்கலம்‘ என்னும் வழக்குச்சொல்லை நோக்குவோம். நல்லதை வாயால் சொல்வார்களேயன்றிக் கெட்டதைத் தமிழர்கள் வாயால் சொல்லமாட்டார்கள். கெட்டவர்களைக்கூடக் ‘கெட்டவர்‘ என்னாது, ‘அவர் யாரோ‘ எனக் கூறுவது, தமிழர் பண்பாடு.
‘கொல்லா விரதமெனக் கொண்டவரே நல்லோர் மற்றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே‘ என்று தாயுமானவர் தம் பராபரக்கண்ணியில் குறிப்பிடுவது ‘மங்கலம்‘ என்னும் வழக்குக்கருதிதான் எனலாம். இவைபோன்ற இலக்கண அமைதிகள் தமிழில் காலமும் இடமும் கருதி, தமிழர்தம் பண்பும் நாகரிகமும் கெடாதவகையில் பயன்படுகின்றன. - நல்ல தமிழ், அ. மு.
பரமசிவானந்தம் அறிவோம் தெளிவோம் விள்ளல், விண்டல், விழைதல் ஆகிய சொற்களின் அடிப்பகுதி ‘விள்‘ என்பது. ‘விள்‘ என்ற அடிச்சொல்லிற்கு ‘விருப்பம்‘ என்பது பொருள். ‘விள்‘ என்னும் அடிப்பகுதிதான் வங்கம் - பங்கம்; வண்டி - பண்டி; வெற்றிலை – Betel போல் ‘வகர பகர‘ மாற்றத்தில் மேலை இந்தோ – ஐரோப்பிய மொழிகளில் விள் - Phil எனத் திரிந்தது. ‘விருப்ப ஆய்வு‘ என்பதன் வழியாகவே, ‘வேர்ச்சொல் ஆய்வு‘ ‘Philology’ ஆனது என்பார் பாவாணர்.
அறிவோம் தெளிவோம் கூழாங்கல்: மலைமேலிருந்து ஆற்றிலும் அருவியிலும் அடித்து வரப்படும் கூரான கற்கள், பல இடங்களிலும் மோதி மோதிக் குழைவாகிவிடுகிறது. இக்குழைவான கல்லே கூழ் + ஆம் + கல் = கூழாங்கல் என்றானது. அறிவோம் தெளிவோம் திறனாய்வு குறித்து, டாக்டர் ஜான்சன் என்பாரின் கூற்று ‘திறனாய்வு‘ என்பவள் முயற்சி, உண்மை என்ற இருவருக்கும் தோன்றிய முதல்மகள். பிறந்தவுடன் இப்பெண், ‘நடுவுநிலைமை‘ என்னும் செவிலித்தாயால், ‘மெய்யறிவு‘ என்னும் அரண்மனையில் வளர்க்கப்பட்டாள்.
இளமையிலேயே இவளிடம் காணப்பெற்ற சிறப்பியல்புகள் காரணமாக, இவள் ‘கற்பனை‘ என்பவனுக்குத் துணைவியாக அமைந்தாள். - இலக்கியக்கலை, பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.
‘திருக்குறளும் நாலடியாரும்‘ என்னும் ஆய்வுக்கு, ஒப்பியல் அணுகுமுறையும் தேவைப்படுகின்றன. ஆகவே, ஆய்வுப்பொருளுக்கு ஏற்றவாறு அணுகுமுறைகளும் மாறுகின்றன. அவ்வகையில், பல திறனாய்வு அணுகுமுறைகள் உள்ளன. அணுகுமுறைகளுள் சிலவற்றை மட்டும் மிகச் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
அறிவோம் தெளிவோம் திறனாய்வுக்கு இணையான ஆங்கிலச் சொல், ‘criticism’. இச்சொல், ‘கிரிட்டிகோஸ்‘ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகும். இதன் பொருள், பிரித்துப் பார்ப்பதும் தீர்ப்புச் சொல்வதும் ஆகும். ‘கிரிட்டிசிஸம் என்பதை, ஒரு கலைச்சொல்லாக முதலில் பயன்படுத்தியவர் ஜான் டிரைடன் (John Dryden) ( ஆம் நூற்) என்னும் ஆங்கிலக் கவிஞர் ஆவார்.
அதற்கு முன்னால் Critic என்ற சொல்லைப் பயன்படுத்தியவர், சிந்தனையாளர் பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) ( ). தமிழில் criticism என்ற சொல்லுக்கு இணையாக விமர்சனம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர், பேரா. ஆ. முத்துசிவன் ( ).
‘விமரிசை’ என்ற வடமொழி வழக்கிலிருந்துவந்த இச்சொல்லுக்குப் பாராட்டுதல், விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லுதல் என்று பொருள். தமிழில், இச்சொல்லுக்கு இணையாகத் ‘திறனாய்வு’ என்ற சொல்லை வழக்கத்தில் விட்டவர், பேரா. அ. ச.
ஞானசம்பந்தன். ( ). - திறனாய்வுக்கலை, பேராசிரியர் தி. சு.
நடராசன் அறிவோம் தெளிவோம் ஆங்கிலத்தில் விமர்சனத்திற்கென்றே தனிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. Saturday Review of Literature என்ற விமர்சனப் பத்திரிகையில் வெளிவரும் புத்தக விமர்சனங்களைப் படித்தால், ஒரு நூலைப்பற்றி வாசகன் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ, அத்தனையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. இலக்கிய விமர்சனம், ரகுநாதன். அறிவோம் தெளிவோம் உலகத்தின் முதல் வானொலி நிலையம் ஆம் ஆண்டு அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது.
‘‘அமெரிக்க ஜனாதிபதியாக ஹார்டிங்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்பதே இதில் ஒலிபரப்பப்பட்ட முதல் செய்தியாகும். அறிவோம் தெளிவோம் உஷா மேத்தாவின் சுதந்திரக் குரல் வானொலி நிலையம் ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர், தமது ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் , ஆகஸ்ட் அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பப்பட்டன.
இந்நிலையத்தை ஒரே இடத்திலேயே தEொடர்ச்சியாகச் செயல்படுத்த முடியவில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இடம்மாற்றப்பட்டது. மூன்று மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது. அறிவோம் தெளிவோம் அலைக்கற்றை எஸ்.
பாண்ட் (S-Band) அலைக்கற்றை என்பது முதல் கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும். இது அலைபேசித் தEொலைத்தொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழித் தEொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் . கிகா கெட்சு ( - கிகா கெர்ட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் ஆம் ஆண்டு தரைவழி அலைபேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவோம் தெளிவோம் ஆசிரியர்: முற்றிலும் தவறு. செய்திக்கு உரியவர், தாம் நேரடியாகத் தராத செய்திகளைச் சித்திரித்து ஒளிபரப்பினால் மக்களாகிய நாம் அப்படியே நம்புதல் கூடாது. அந்தச் செய்தியைப் புறக்கணிப்பது நன்று. அறிவழகன்: மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது. அதை மக்களாகிய நாமும் ஆதரிக்கக் கூடாது. சலீம்: நன்றாகப் புரிந்துகொண்டோம் ஐயா! இனி, நாங்கள் ஆதாரமற்ற செய்திகளை நம்பமாட்டோம்.
ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம் என்ற ஒன்றை முன்பு கூறினீர்கள் அல்லவா? அச்சட்டத்தைப் பற்றிக் கூறுங்கள் ஐயா! அறிவழகன்: இந்தியக் குற்றவியல் சட்டத்தில் (IPC) , , முதலான பிரிவுகள் எவை எவை ஆபாசம் எனப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. அவற்றின் அடிப்படையில் நாகரிகமற்ற வார்த்தைகள், தரக்குறைவான சொல்லாடல்கள், அரைகுறை ஆடை ஓவியங்கள், அவ்வாறான புகைப்படங்கள், பாலினத்தை இழிவுபடுத்தும் கருத்துகள் மற்றும் படங்கள், பாலுணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகள், இளைஞர்களின் மனத்தைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெளியிடுதல் முற்றிலும் தவறாகும்.
மீறி வெளியிடும் ஊடக நிறுவனத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. ஆசிரியர்: இப்பொழுது புரிகிறதா மாணவர்களே! ஆபாச வெளியீடு ஊடகத்தில் வந்தால், இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தEொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு ஆம் ஆண்டு மே திங்கள் – ஆம் நாள் தEொடங்கப்பட்டது.
அந்நிகழ்ச்சிக்குத் தEொடக்கத்தில் ‘செய்தி மடல்‘ எனப் பெயரிட்டிருந்தார்கள். -இல் இந்நிகழ்ச்சிக்கு ‘ தமிழோசை‘ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார். தொடக்கத்தில் வாரம் ஒருநாள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் 80களின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என விரிவுபடுத்தப்பட்டது. 80களின் இறுதியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது.
வெளிநாட்டுச் சேவையான பிபிசி, ’வோர்ல்ட் சர்வீஸ்’ என்ற பெயரில் மொழிகளில் ஒலிபரப்புகின்றது. இதில் தமிழும் அடங்கும். உலகத் தமிழர்கள் இங்கிலாந்திலிருந்து வரும் தமிழோசை நிகழ்ச்சியைத் தங்கள் மொழிக்குக் கிடைத்த பெருமையாகவே கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவோம் தெளிவோம் தமிழில் பொம்மலாட்டக் கலைக்குப் பெருமை சேர்த்தவர் முத்துக்கூத்தன்.
இவர் திருச்சியை அடுத்த பொய்யாமணி என்னும் கிராமத்தில் பிறந்தவர். திருச்சியில் ஆம் வகுப்புவரை படித்தார். இவர் சென்னைக்கு வந்த பிறகு நகைச்சுவை நடிகராகவும், மேடைப் பாடகராகவும், பாடலாசிரியராகவும் தம்மை மேம்படுத்திக்கொண்டார். தன் மகன் கலைவாணனுடன் சேர்ந்து பொம்மலாட்டக் கலையில் ஈடுபட்டார்.
சென்னைத் தொலைக்காட்சியில் ‘கண்மணிப்பூங்கா’ என்னும் நிகழ்ச்சியில் முத்துக்கூத்தனின் பொம்மலாட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, குடும்ப நலம், இயற்கை வேளாண்மை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வுக் கதைகள் பொம்மலாட்டங்களில் நிகழ்த்தப்பட்டன. கிராம மக்களுக்குப் பயன்படும் கல்வி, உடல்நலம், தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார். இதன் மூலம் சென்னைத் தொலைக்காட்சியில் அறிவோம் தெளிவோம் கேட்கத் தூண்டும் வகையில் கலைநயத்துடன் அமைந்திருந்தன.
பாமர மக்களிடமும் எளிமையான முறையில் நேர்காணல் நிகழ்த்தி நுட்பமான தகவல்களைச் சேகரிப்பதில் வல்லவர். இவர் வலி தெரியாமல் ஊசிபோடும் மருத்துவரைப் போல் நேர்காணல் அளிப்பவரிடமிருந்து செய்திகளைச் சேகரிப்பார். ஒருமுறை வெண்பன்றி வளர்ப்பவரிடம் நேர்காணல் நிகழ்த்தச் சென்ற இவர், ‘என்ன தொழில் பார்க்கறீங்க?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘வெண்பன்றி வளர்க்கிறேன்’ என்று பதிலளித்தார்.
‘பன்றியா வளர்க்கறீங்க?’ என்று கிண்டலாகக் கேட்டபொழுது, அவருக்கு கோபம் வந்துவிட்டது. ‘பன்றி வளர்ப்பது அவ்வளவு கேவலமா? பன்றி வளர்ப்பால் என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா? எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பது தெரியுமா?’ என அடுக்கடுக்காகக் கூறி, பன்றி வளர்ப்பின் பயனையும், முறையை யும் கூறினார்.
இவ்வாறு செய்திகளைப் பெறுவதில் இவர் புதுமையான அணுகுமுறையை க் கையாண்டார். இவர் சிறந்த புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தார். பயிர்களின் இடையில் மறைந்திருக்கும் பூச்சிகளையும் மிகவும் தெளிவாகப் படம் எடுத்துவிடுவார். இவரால் எடுக்கப்பட்ட பூச்சிகளின் புகைப்படங்கள் இன்று பல ஆய்வுக்கூடங்களிலும் வேளாண் அலுவலகங்களிலும் ஆவணமாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.
இவர் துணிவும் தன்னம்பிக்கையும் மிக்கவர். வானொலியின்மீதும் விவசாயிகள் மீதும் அளவுகடந்த பற்றுள்ளவராகத் திகழ்ந்தார். இவருடைய பண்ணை இல்லம் நிகழ்ச்சி உழவுத் தொழில் செய்யும் மக்களுக்கு அதிக வருவாயை ஈட்டுவதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. அறிவோம் தெளிவோம் வெளியிடும் வரை உண்மையான திறன்பேசிப் புரட்சி தொடங்கவில்லை.
ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் – முதல் தலைமுறைத் திறன்பே சியாகப் பலமுனைத் தொடுதிரை கொண்ட கைபேசியை உருவாக்கி மக்களைக் கவர்ந்தது. ஐஃபோனின் அழகிய வடிவமைப்பையும் திறனை யும் செயல்பாட்டையும் அளவிட்டால், அது ஆப்பிள் நிறுவனம் செய்த புரட்சிகரமான மாற்றம் எனலாம். அதுவரை பொத்தான்களைக் கொண்டு அழைப்பு எண்களை அழுத்தும் வழக்கமிருந்தது. திறன்பேசிகளின் வருகைக்குப்பின் கருவிக்கு வெளியே இருந்த பொத்தான்கள் திரைக்குள்ளே தெரியத் தொடங்கின.
இதுவும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கூகுளின் முதல் ஆண்டிராய்ட் இயங்குதளம் கொண்ட செல்பேசி, எச்டிசி நிறுவனத்தின் “டிரீம் ஃபோன்”களில் ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலத்தில்தான் சல்பேசிகள் இணைய வசதியுடன் கூடிய கையடக்கக் கணினியாகச் செயல்படும் திறன்பேசிகளாக உருமாறின. திறன்பேசியின் மிகப்பெரிய வளர்ச்சியால் ஆம் ஆண்டிற்குப் பிறகு தகவல் தொடர்புத்துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டன.
இன்று, ஓரிடத்தில் அமர்ந்து கணினியில் செய்துவந்த பணிகள் அனைத்தையும், கையில் எடுத்துச்செல்லும் திறன்பே சியிலேயே செய்து முடித்துவிடுகிறோம். மின்னஞ்சல் சேவை தொடங்கி, தகவல் தேடல், செய்தி அறிதல், பயணச்சீட்டு முன்பதிவு, வங்கிப் பணப்பரிமாற்றம், சமூக வலைத்தளத் தகவல் பரிமாற்றம், மின்வணிகம் உட்பட, இணையம்வழியே சாத்தியமாகும் அனைத்துச் சேவைகளையும் திறன்பேசி வழியாகப் பெற முடிகிறது. அறிவோம் தெளிவோம் மனிதர்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் எந்த மொழியும் இயற்கை மொழியாகும். செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள் இயற்கை மொழியில் இருந்து வேறுபட்டவை.
எடுத்துக்காட்டாக, கணிப்பொறியில் பயன்படுத்தும் நிரலாக்க [programming language] மொழிகளான சி (C), சி++ (C++), ஜாவா (JAVA), பெர்ல் (Perl) , பைத்தான் [Python] போன்றவை செயற்கை மொழிகளாகும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →